Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவியா இல்லாத வீடு எப்படி... காயத்ரி செய்தது சரியா... பாரபட்சம் காட்டுகிறாரா கமல்? #VikatanSurveyResults #BiggBossTamil

Bigg Boss Tamil

ஒவ்வொரு நாளும் பதற்றம், பரவசம் என மக்களின் டீக் கடைப் பேச்சாக மாறியிருக்கும் ஒன்று ‘பிக்பாஸ்’. யார் பிக் பாஸ் டைட்டில் வின்னர்?, பிக் பாஸ் பற்றி உங்கள் கருத்தை அறிய 'பிக் பாஸ்' சர்வே எடுத்தோம். கிட்டத்தட்ட 11,328 பேர் இந்த சர்வேயில் பங்கெடுத்திருக்கிறார்கள். அதன் முடிவுகள் இதோ... 

ஓவியா

இந்த வாரம் `பிக் பாஸ்' வீட்டிலிருந்து காயத்ரிதான் வெளியேறுவார் என அதிகம் பேர் நினைத்திருக்கிறார்கள். 78.9 சதவிகிதம் பேர் இதற்கு காயத்ரியை கணித்திருக்கிறார்கள். ஆனால், இவர் எவிக்ஷனில் இருந்து தப்பியது தனி கதை. ஷக்தி வெளியேறுவார் என 7.3 சதவிகிதம் பேரும், 5.2 சதவிகித பேர் ஆரவையும், 5 சதவிகித பேர் வையாபுரியையும்,  2.6 சதவிகித பேர் கணேஷ் வெங்கட்ராமையும், 0.9 சதவிகித பேர் சினேகனையும் தெரிவித்திருக்கிறார்கள். 

பிக் பாஸ்

 

ரைசா நடவடிக்கைகள் கவர்கின்றன என 50.7 சதவிகித பேர் லைக் தட்டியிருக்கிறார்கள். கருத்தாக பேசுவதால் என்னவோ இரண்டாவது இடம் வையாபுரிக்கு. இவரது நடவடிக்கைகளை 17 சதவிகித மக்கள் ரசிக்கிறார்கள். 15.9 சதவிகிதம் பேர் சினேகனையும், 6.5 சதவிகிதம் பேர் பிந்து மாதவியையும், 6.3 சதவிகிதம் பேர் கணேஷ் வெங்கட்ராமையும், 2.3 சதவிகித‌ பேர் ஆரவையும், 0.8 சதவிகித‌ பேர் ஷக்தியையும், கடைசியாக‌ வெறும் 0.6 சதவிகிதம் பேர் காயத்ரியின் நடவடிக்கைகள் கவர்கின்றன என்று வாக்களித்திருக்கிறார்கள்.


அதிகம் எரிச்சல் அடையும் நடவடிக்கை காயத்ரியிடம் இருப்பதாக  74.9 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது இடம் ஷக்திக்கு. 16.8 சதவிகிதம் பேர் இவரது நடவடிக்கை  ரசிக்கத்தக்கது இல்லை என்கிறார்கள். 2.5 சதவிகிதம் பேர் சினேகனையும், 2.2 சதவிகிதம் பேர் ஆரவையும், 1.2 சதவிகிதம் பேர் வையாபுரியையும், 1.1 சதவிகிதம் பேர் கணேஷ் வெங்கட்ராமனையும், பிந்து மாதவிக்கும், ரைசாவுக்கும் 0.6 சதவிகிதம் பேர் இவர்களது நடவடிக்கைகள் எரிச்சல் அடைய வைப்பதாக சொல்கிறார்கள். 

காயத்ரி சொன்னது 'சுத்த அபத்தம்' என 78.5 சதவிகித பேரும், 'அவர் இஷ்டம், நாம என்ன சொல்வது?' என 17.9 சதவிகித பேரும், 3.6 சதவிகிதம் பேர் அவர் சொல்வது ஏற்கத்தக்கதுதான் என்கிறார்கள்.


கமல், போட்டியாளர்களிடம் பாரபட்சம் இல்லாமல் நேர்மையாக‌ பேசுகிறார் என 66.9 சதவிகித‌ பேர் கருதுகிறார்கள். 24.3 சதவிகித பேர் 'காயத்ரியிடம் மட்டும் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் எனவும், இல்லை என வெறும் 8.8 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். ஆக, மொத்தம் நேர்மையான‌ தொகுப்பாளராகவும் மக்கள் மனதில் என‌ இடம் பிடித்துவிட்டார் கமல்.


ஆரவ்தான், ஓவியா வெளியேற முக்கியமான காரணமாக மக்கள் நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட 50.6 சதவிகித மக்கள் ஆரவை சொல்கிறார்கள். 34.3 சதவிகிதம் பேர் காயத்ரி எனவும், 12.7 சதவிகிதம் பேர் ஜூலி எனவும் கருதுகிறார்கள். ஷக்தி காரணம் என‌ 1.6 சதவிகிதம் பேர் நினைக்கிறார்கள். மற்ற ஹோம் மேட்ஸ்  அனைவரும் 1 சதவிகிதத்துக்கு கீழ்  வாக்குகளை  வாங்கியிருக்கிறார்கள்.


ஓவியா இல்லாத 'பிக் பாஸ்' நிகழ்ச்சி 59.8 சதவிகிதம் பேர் 'போர் அடிக்கிறது' என்கிறார்கள். 29.4 சதவிகிதம் பேர் 'ஓவியா வெளியேறியதற்கு பிறகு பார்க்கவில்லை' எனவும், 10.8 சதவிகிதம் பேர் மட்டும் வழக்கம் போல்தான் உள்ளது என தெரிவித்திருக்கிறார்கள். 


Wild card என்டரியில் யார் மீண்டும் வர வேண்டும் என்ற கேள்விக்கு 79.2 சதவிகிதம் பேர் 'ஓவியா'-வை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 10.5 சதவிகிதம் பேர் பரணி வர வேண்டும் எனவும், ஜூலி வர வேண்டும் என 3.6 சதவிகித மக்களும் நினைக்கிறார்கள். ஆர்த்திக்கு 2.8 சதவிகித பேரும், கஞ்சா கருப்புக்கு 2.2 சதவிகித பேரும், அனுயாவுக்கு 0.7 சதவிகித பேரும், ஸ்ரீக்கு 0.6 சதவிகித பேரும், நமீதாவுக்கு 0.4 பேரும் மீண்டும் 'பிக் பாஸ்' வீட்டிற்குள் வர வேண்டும் என தங்கள் ஆசைகளை வாக்குகளாக தட்டியிருக்கிறார்கள். 


இந்த கேள்விக்குத்தான் பெரிதும் வாக்குகள் சிதறி விழுந்திருக்கின்றன. தற்போது உள்ளே இருப்பவர்களில் சினேகன்தான் ஜெயிப்பார் என 43 சதவிகிதம் பேர் கருதுகிறார்கள். இரண்டாவது இடம் ரைசாவுக்கு. 25 சதவிகிதம் பேர் இவருக்கு தான் வெற்றி வாய்ப்பு  என‌ வாக்களித்திருக்கிறார்கள். 11.8 சதவிகித‌ பேர் வையாபுரி எனவும், 10.6 சதவிகித‌ம் பேர் கணேஷ் வெங்கட்ராம் எனவும், 7.3 சதவிகித பேர் பிந்து மாதவி எனவும், 1.4 சதவிகித பேர் ஆரவுக்கும் அந்த வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள். ஷக்தி வெற்றி பெறுவார் என 0.6 சதவிகித பேரும், காயத்ரி வெற்றி பெறுவார் என வெறும் 0.3 சதவிகித பேர் மட்டுமே கருதுகின்றனர். 


'இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வெளியே வந்தால்..?' மக்களால் கொண்டாடப்படுவார்கள் அல்லது வெறுக்கப்படுவார்கள் என 57.5 பேர் நினைக்கிறார்கள். 23.1 பேர் போட்டியாளர்களின் 'இமேஜ் பாதிக்கும்' என கருதுகிறார்கள். 19.3 சதவிகித பேர் மட்டும், எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள் என நினைக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close