Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போ கிங்ஸ்மேன்... இப்போ ஸ்டேட்ஸ்மேன்... கிங்ஸ்மேன் கோல்டன் சர்க்கிள் படம் எப்படி?


ஜேம்ஸ் பாண்ட், மிஷன் இம்பாஸிபிள் படங்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போலவே ஸ்பை த்ரில்லர் காமெடி படங்களுக்கும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். ஜானி இங்கிலிஷ், ஸ்பை, ஏஜென்ட் கோடி பேன்க்ஸ் என பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 2014ல் வெளியான கிங்ஸ்மேன் தி சீக்ரெட் செர்விஸும் இதே வகைப் படம் தான். முதல் பாகம் ஹிட் அடிக்க, தற்போது இரண்டாம் பாகமான கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்க்கிள் வெளிவந்து இருக்கிறது. 

kingsman the golden circle


போதைப் பொருள்களை உலகமெங்கும் விற்கும் ஜூலியான மூர் கிங்மேன் குழுவை ஒட்டுமொத்தமாய் கொன்றுவிடுகிறது. மீதமிருக்கும் நபர்கள் கென்டக்கியில் இருக்கும் ஸ்டேட்ஸ்மேன் என்னும் சீக்ரெட் குழுவில் சேர்கிறார்கள். கிங்ஸ்மேனுக்குப் பதில் ஸ்டேட்ஸ்மேன்.. உலகை எப்படி மீண்டும் காக்கிறார்கள் என்பதுதான் கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்க்கிள். 
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் கார் சேஸ் சண்டையை நக்கல் அடித்தபடி ஆரம்பிக்கிறது முதல் சண்டைக் காட்சி. நாயகன் எக்ஸி எப்படி எப்படியோ, அந்தக் காரில் சார்லியுடன் சண்டைபோட, ஒருவழியாய் தப்பிக்கிறார். அதற்குள், சார்லியின் இரும்புக்கை காரில் இருக்கும் கம்ப்யூட்டரை ஹேக் செய்து, கிங்ஸ்மேன் அணியில் இருக்கும் அனைவரது இடத்தையும் கண்டுபிடித்து தரைமட்டமாக்குகிறார்கள். மிச்சமிருக்கும் நபர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்க, கையில் கிடைக்கிறது அடுத்த துருப்புச்சீட்டு. அதை வைத்துக்கொண்டு கென்டக்கியில் இருக்கும் ஸ்டேட்ஸ்மென் என்னும் கடைக்கு செல்கிறார்கள். முதல் பாகத்தில் டெய்லர் கடையில் கிங்ஸ்மேன் என்னும் ரகசிய ஏஜென்சியை நடத்தியதுபோல், இந்த முறை ஸ்டேட்ஸ்மென் என்னும் மதுபான கிடங்கில் ஒரு ரகசிய ஏஜென்சி. பிறகு முதல் பாகத்தில் வருவது போலவே, உலகை காத்தல், வில்லன்கள் வெடித்துச் சிதறல், சில ஆபாசக் காட்சிகள் என அதே கதைதான்.

kingsman : the golden circle

தன் போதைப் பொருள் கிடங்கை சுற்றி கன்னிவெடிகள் புதைத்து வைப்பது; தனக்குத் துரோகம் செய்த நபரை, அங்கேயே வெட்டி பர்கராக மாற்றி புது கூட்டாளிக்கு சாப்பிட கொடுப்பது; ரோபோ நாயை வைத்து கடிக்க விடுவது என டெர்ரர் காமெடி வில்லியாக கலக்கி இருக்கிறார் ஜூலியான மூர்.  உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களுக்கு போதைப் பொருளை சப்ளை செய்துவிட்டு, அதில் இப்படியொரு வேலையை செய்வதெல்லாம் டூ மச். போதை வெறி தவறு இளைஞர்களே என்பதை இவ்வளவு அழுத்தமாய் சமீபத்தில் பதிவுசெய்த படம் எதுவும் இல்லை. சரி, படத்தின் லாஜிக் படி, ஹீரோ எல்லோரையும் காப்பாற்றிவிட்டால், மீண்டும் போதைப் பொருள் அப்படியேதான் இருக்கும். நல்ல போதைப் பொருள் வாங்கி உபயோகியுங்கள் என்பதைப் பதிவு செய்கிறது கிங்ஸ்மேனின் இந்தப் பாகம். 
படத்தில் இருக்கும் ஒரே பாஸிட்டிவான விஷயம் படத்தில் வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பற்றிய குறியீட்டு நக்கல்கள் தான். படத்தின் இயக்குநர் மாத்யூ வான் டிரம்ப் குறித்த நக்கல் காட்சிகளை நிக்கிவிட்டதாக சொன்னாலும், படத்தில் வரும் கதாபாத்திரம் அப்படியே டிரம்ப்புக்கு பொருந்திப்போகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரு அதிபராக வருபவர் செய்யும் கோமாளித்தனங்கள் டிரம்ப் அளவுக்கு இல்லை என்பது மட்டும் தான் நிதர்சனம். 

முதல் பாகம் ஹிட் அடித்த தைரியத்தில் இரண்டாம் பாகத்தை எழுதி இயக்கி இருக்கிறார்  மாத்யூ வான். அடுத்த பாகம் இருக்கும் என்பதில் மாத்யூ உறுதியாக இருக்கிறார். நாமும் உறுதியாக இருப்பது, நமது பர்ஸுக்கு நல்லது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close