Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி காப்ரியோவுக்கு ஆஸ்கார் கிடைக்க ஒரு ஆப்!

பூமிக்கும் நிலாவுக்கும் இடையிலுள்ள தூரத்தை ஆயிரத்தால் பெருக்கி அதனுடன் ஐந்து லட்சத்தைக் கூட்டி அதனுடன் பூச்சியத்தைக் கழித்தால் எத்தனை தூரம் வருமோ அதை விட அதிக தூரம் லியானார்டோ டி காப்ரியோவுக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கும் உள்ள தூரம்.

இதுவரை ஐந்து முறை ஆஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு ஒரு முறை கூட லியோனார்டோவுக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது இல்லை. முதல் முறையாக அவர் ஆஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு இந்த ஆண்டோடு இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
இருபத்தி இரண்டு ஆண்டுகளாக ஒரு விருது கூட பெற முடியாத போதும் அவர் மனம் உடைந்து போகாமல் மேலும் மேலும் தன் நடிப்பை மெருகூட்டிக் கொண்டே வந்திருக்கிறார்.

இருந்தாலும், லியோவின் ரசிகர்களும் சரி, மற்றவர்களும் சரி இதனை ஒரு துண்பமாக எடுத்துக் கொள்ளாமல் தங்களுக்குள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, பல மீம்களைப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு இங்கே சில. http://www.smosh.com/smosh-pit/memes/internets-best-reactions-leonardo-dicaprio-not-winning-oscar

இதுவரை மீம்களாகப் போட்டு லியோவை வறுத்தெடுத்த நிலையில் இப்போது ஒரு கேம் உருவாக்கி கலாய்க்கும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள்.

ஆஸ்கர் விருதுகள் நிகழ்வின் சிகப்புக் கம்பள வரவேற்பில், லியோவுடன் விருதுக்கானப் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும். மற்ற நான்கு பேர்களுக்கும் ஓர் ஓட்டப்பந்தயம். அதன் இறுதியில் இருக்கும் பரிசைத் தூக்க வேண்டும். அதற்கு வழியில் பல தடைகள் இருக்கும் இந்தத் தடைகளையும் கடந்து போட்டியாளர்களையும் விட வேகமாக ஓடிப்போய் ஆஸ்கர் விருதை லியோ பெற வேண்டும். இதுதான் இந்த கேமின் அடிப்படை.

லியோ விருதைப் பெற நீங்கள் தான் அவருக்கு உதவி செய்ய வேண்டும், வழியில் வரும் தடைகளைத் தாண்டியும், வேகமாக ஓட வைக்க வேண்டும். லியோவை ஓட வைத்துவிட்டால் ஆஸ்கர் விருது லியோவுக்குத் தான். ஒரு வேளை உங்களால் கூட லியோவுக்கு உதவ முடியவில்லை என்றால், திரையில் "இன்னும் ஆவேசமா நடிங்க பாஸு" என்று வரும்.

மீண்டும் என்ன, லியோ மீண்டும் மீண்டும் ஆஸ்கர் விருதுகளைப் பெற முயற்சிப்பதைப் போல நீங்களும் செய்ய வேண்டியது தான். இந்தக் கேமை விளையாட: http://redcarpetrampage.com/

மீம்கள் போட்டு கலாய்ப்பதற்குப் பதில், வீடியோ கேம்களைப் போட்டு கலாய்ப்பது என்னமோ அமெரிக்கா கலாச்சாரம் என்று நினைக்காதீர்கள். நம்மூர் இளைய தளபதியின், சுறா ஜம்ப், விழுப்புரம் ரன் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கே கேம்கள் போட்டுக் கலாய்த்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விஜயை ஆக்குங்கள் என்று விஜய் 3D Run என்று ஒரு கேம் இருக்கிறது. நீங்கள் யோசித்ததே தான், அஜித்தை சூப்பர் ஸ்டாராக்க வைக்க நீங்கள் உதவும் படியான இன்னொரு கேமும் இருக்கிறது. அஜித், விஜய் மட்டுமல்ல, இந்தியில் ஷாருக், அக்‌ஷய் குமார் என்று பல கேம்கள் இருக்கின்றன.

------------------------------------------
https://play.google.com/store/apps/details?id=com.cg.vijay3drun
https://play.google.com/store/apps/details?id=com.cg.a3drun
https://play.google.com/store/apps/details?id=com.cg.fmv

-இனியன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close