Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொபைலில் எடுக்கப்பட்டு கவனம் ஈர்த்த 4 அசத்தல் திரைப்படங்கள்!

டிஜிட்டல் வளர்ச்சிக்குப் பிறகு மொபைல் கேமராவைக் கொண்டே சினிமாக்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் பெரும்பாலானவை குறும்படங்கள் என்றாலும், மொபைலில் எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படங்களும் இருக்கின்றன. அதில் சில...

 Tangerine 

2015-ல் வெளியான திரைப்படம். சீன் பார்க்கர் என்பவரது இயக்கத்தில் உருவான இதில், சிறையில் இருந்து திரும்பும் திருநங்கை ஒருவர், தோழியும் சக திருநங்கையுமான ஒருவருடன் இணைந்து தனது காதலனைத் தேடிச்செல்வதைத் திரைக்கதை ஆக்கியிருக்கிறார். காமெடிப் படமான இது, அழகான அமெரிக்காவின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது. திருநங்கையான கிடானா கிகி என்பவர் இப்படத்தின் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார். 87 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் முழுக்க மொபைலில் எடுக்கப்பட்டது. 'எ ரிவென்ச் ஆஃப் டிரான்ஸ்ஜென்டர்' என்ற கலக்கலான கேப்ஷனுடன் வெளியான இப்படம், சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

டன்ஜெரின் - மொபைல் சினிமா

 I Play With the Phrase Each Other

வெவ்வேறு நபர்களின் தொலைபேசி உரையாடல்களே இப்படத்தின் கதை, காட்சியமைப்பு எல்லாமே. அதாவது, படத்தில் இடம்பெறும் கேரக்டர்கள் அனைவருமே மொபைல் அல்லது தொலைபேசி வழியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய போன் கால்களே கதையை நகர்த்தும். பரிசோதனை முயற்சியாக உருவான இப்படமும் மொபைலில் எடுக்கப்பட்டது. தவிர, 'first feature film composed entirely of phone calls' என்ற அடையாளத்தையும் பெற்றது இப்படம். படத்தின் கதை தொலைபேசி வழியாகப் பேசி மக்களை ஏமாற்றுவது. அமெரிக்க இயக்குநர் ஜாய் அல்வரிஸ் என்பவர் இப்படத்தை இயக்கியிருப்பதோடு, முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார். 1 மணி 50 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படமும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. 2014-ல் இப்படம் வெளியானது. 

ஐ பிளே வித் த பார்ஸ் ஈச் அதர் - மொபைல் சினிமா

And Uneasy Lies the Mind

இப்படமும் அமெரிக்காவில் உருவானது. 2014-ல் வெளியான சைக்கலாஜிகல் த்ரில்லர். பீட்டர் - ஜூலி இருவரும் தம்பதிகள். நடிகரான பீட்டர், தனது பிறந்தநாள் விருந்துக்காக நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைக்கிறார். மலைப் பகுதியில் இருக்கும் அவர்களது வீட்டில் அன்று நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. 88 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படத்தை ரிக்கி ஃபோஷிம் என்பவர் தயாரித்து இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். மொபைலில் எடுக்கப்பட்ட இப்படத்தின் மொத்த பட்ஜெட் 10,000 டாலர்கள் மட்டுமே!

மொபைல் சினிமா

Searching for Sugar Man

90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம், அமெரிக்காவில் பிறந்து, தென்ஆப்பிரிக்காவில் பிரபலமடைந்த பாடகர், கவிஞர் சிக்ஸ்டோ ரோட்ரிக்ஸ் என்பவரைப் பற்றியது. அமெரிக்காவில் நிராகரிக்கப்பட்ட இசை, தென் ஆப்பிரிக்காவில் எப்படிக் கொண்டாடப்பட்டது என்ற பின்னணியில் உருவான இந்த ஆவணப்படத்தை நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து இயக்கியிருக்கிறார் மாலிக் பென்ட்ஜொலல். 2012-ல் வெளியான இந்த ஆவணப்படமும் மொபைலில் எடுக்கப்பட்டது. சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதையும் பெற்றிருக்கிறது. 

சர்ச்சிங் ஃபார் சுகர்மேன் - மொபைல் சினிமா

உலகம் மட்டுமல்ல, சினிமாவும் நம்ம மொபைலில்தான்! 

- கே.ஜி.மணிகண்டன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close