Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Smurfs பட முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் வெல்லும் வாய்ப்பு! (சென்னையில் ஷோ)

 

 

ஏப்ரல் 21ம் தேதி வெளியாக பரபரவெனத் தயாராகிக் கொண்டிருக்கிறது ஸ்மர்ஃப்ஸ். நாவலாகவும், திரைப்படமாகி இதற்கு முன் வெளியான இரண்டு பாகங்கள் மூலமாகவும் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மர்ஃப்களுக்குப் பல ரசிகர்கள் உண்டு. முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்திலும் அசத்தலான விஷுவல்களோடு  தயாராகியிருக்கிறது படம். இந்த பாகத்தில், ஸ்மர்ஃப் கூட்டத்தில் இருக்கும் பெண் ஸ்மர்ஃபான ஸ்மர்ஃபிட்டி தன்னைப் போன்ற இன்னொரு பெண் ஸ்மர்ஃபைப் பார்க்கிறாள். கூடவே ஒரு மேப் கிடைக்க, தன் நண்பர்களான ப்ரைனி, க்ளம்ஸி மற்றும் ஹெஃப்டி ஆகியோருடன் அந்த மேப்பைப் பின்பற்றி தொலைந்து போன  ஸ்மர்ஃப் கிராமத்தைத் தேடி பயணிக்கிறார்கள். அவர்கள் அந்த கிராமத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள், மந்திரவாதி கேர்கேமலால் என்ன பாதிப்பு ஏற்பட்டது, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஸ்மர்ஃப்களின் ரகசியம் என்ன? போன்ற விஷயங்களைப் பற்றிக் கூற இருக்கிறது 'ஸ்மர்ஃப்ஸ்: த லாஸ்ட் வில்லேஜ்'. ஸ்மர்ஃப்ஸ் படத்தின் கதாபாத்திரம் துவங்கி படம் உருவானது வரை பல சுவாரஸ்யங்கள் நடந்திருக்கிறது அவற்றைப் பற்றி பார்க்கலாமா?

ஸ்மர்ஃப்

 

* ஸ்மர்ஃப் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர் பெல்ஜியனைச் சேர்ந்த கார்டூனிஸ்ட்டான பியர் கலிஃபோர்டு. அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் எதுவும் வைக்காமல் இருந்த பியர், தன் நண்பருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உப்பு என்கிற வார்த்தை மறந்து போக, 'அந்த ஸ்த்ரூம்ஃபை எடுத்துக் கொடு' என சொல்லியிருக்கிறார். ஸ்த்ரூம்ஃபை என்றால் ஃப்ரென்ச் மொழியில் உயிரினம் என்று பொருள். அந்த சொல்லுக்கான டச்சு மொழி பெயர்ப்பு தான் 'ஸ்மர்ஃப்'. அந்த வார்த்தையையே ஆங்கிலத்திலும் பயன்படுத்திக் கொண்டனர்.

 

* 1958ல் ஸ்மர்ஃப்ஸ் உருவாக்கபட்டுவிட்டாலும், 1981ல் இருந்து தான் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாகத் துவங்கியது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே உலகம் முழுக்க ஸ்மர்ஃப்ஸ் பிரபலமாகியது. ஆல்பங்களாக, மேடை நாடகங்களாக, வீடியோ கேம்களாக, பொம்மைகளாக என பல வடிவில் பரவியிருக்கிறது ஸ்மர்ஃப்ஸ். இன்னும் ஒரு வருடத்தில் தனது அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறது இந்த ஸ்மர்ஃப். 

ஸ்மர்ஃப்

 

* ஒவ்வொரு ஸ்மர்ஃபும் மூன்று ஆப்பிளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்தது போன்ற உயரத்தில் இருக்கும், பல நூற்றாண்டு காலம் வாழும், அதில் கிரான்பா ஸ்மர்ஃப் மற்றும் கிரான்மா ஸ்மர்ஃப், பாப்பா ஸ்மர்ஃபை தனியே விட்டு பயணம் ஒன்றுக்கு சென்றுவிடுவார்கள். அதன் பின் மற்ற ஸ்மர்ஃபுகளுக்கு எல்லாம் தந்தையாகவும், தலைவனாகவும் பாப்பா ஸ்மர்ஃப் தான் இருக்கிறது என கார்டூனாக ஒளிபரப்பான போது சொல்லப்பட்டது. அதையே சினிமாவாக மாற்றும் போதும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

 

* ஸ்மர்ஃப் கூட்டத்தில் பெண் ஸ்மர்ஃப்கள் கிடையாது. ஒரு முறை வில்லன் ஸ்மர்ஃபுகளுக்கு இடையில் சண்டை வரவழைப்பதற்காக பெண் ஸ்மர்ஃபான ஸ்மர்ஃபிட்டியைத் தயார் செய்து அந்த கூட்டத்துக்கு நடுவில் விடுவான். ஆனால், பாப்பா ஸ்மர்ஃப், ஸ்மர்ஃபிட்டியை தன் மந்திர சக்தியால் நிஜ ஸ்மர்ஃபாக மாற்றிவிடுவார்.

 

* காமிக்ஸை அடிப்படையாக வைத்து பார்த்தால் மொத்தம் 105 ஸ்மர்ஃப்கள் இருக்கிறது.  ஸ்மர்ஃபிட்டி, சாசஸ்ட் ஸ்மர்ஃஃப்ளிங், நானி ஸ்மர்ஃப் என மூன்று பெண் ஸ்மர்ஃப்களும் இதில் அடக்கம்.

 

* எல்லா ஸ்மர்ஃப்களும் அணிந்திருக்கும் வெள்ளை நிற தொப்பிக்குப் பின் ஒரு கதை இருக்கிறது. பழைய ரோமில் இது சுதந்திரத்திற்கான குறியீடாக இருந்தது. அதாவது விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் அணியும் தொப்பி. ப்ரிஜியன் என்று அழைக்கப்படுகிறது இந்த தொப்பி. சிவப்பு நிற ப்ரிஜியனாகள் ஃப்ரென்ச் புரட்சியின் போது அணியப்பட்டது. படத்தில் எல்லா ஸ்மர்ஃப்களும் வெள்ளை தொப்பியும், இவர்களின் லீடரான பாப்பா ஸ்மர்ஃப் மட்டும் சிவப்பு தொப்பி அணிந்திருக்கும். 

 

* 30 விதமான மொழிகளில் ஸ்மர்ஃப்ஸ் கார்டூன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்மர்ஃப்

 

* 2005ல் ஸ்மர்ஃப்களை வைத்து உருவாக்கி ஒளிபரப்பப்பட்ட போருக்கு எதிரான பிரச்சார விளம்பரம் 'ஸ்மர்ஃப் வில்லேஜ் பாம்டு' மிகப் பிரபலமான ஒன்று. அது வெறும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்பதையும் தாண்டி பெரிய தாக்கத்தை உண்டாக்கியது அந்த விளம்பரம்.

 

* 2011ல் ஸ்மர்ஃப்ஸின் முதல் பாகம் வெளியானதும், ஸ்பைனில் ஜுஸ்கார் (Júzcar) என்கிற கிராமத்தின் அனைத்து வீடுகளும் நீல நிறத்தில் பெயிண்ட் பூசப்பட்டு, ஸ்மர்ஃப் தீம் பார்க்காக மாற்றப்பட்டது. உலகின் முதல் ஸ்மர்ஃப்ஸ் தீம் பார்க் அது தான். 

 

* ஸ்மர்ஃப் திரைப்படத்தின் முதல் பாகத்தை 268 பேர் சேர்ந்து 358,000 மணிநேரம் செலவிட்டு அந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

* ஸ்மர்ஃப் டீமும் யுனிசெஃப் மற்றும் யுனைடட் நேஷன்ஸ் ஃபவுன்டேஷனும் இணைந்து பிரச்சாரம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக மார்ச் 20ம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டம் என்பது, உணவு, கல்வி, சுகாதாரம் என ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட தேவைகள். இவை அனைத்தும் உலகினர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கான விழிப்பு உணர்வு நிகழ்வாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காக 17 குறிக்கோள்கள் அடங்கிய திட்டம் ஐக்கிய நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மக்களும் தங்களால் ஆன முயற்சியை பங்களிக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்வின் இலக்கு. இந்த குறிக்கோள்களைப் பற்றிய விழிப்பு உணர்வை ஸ்மர்ஃப்ஸ் குழுவினர் செய்து கொண்டிருக்கிறார்கள். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close