Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னாள் பேட்மேன்... இப்போ வில்லன்... ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படம் எப்படி?

 

கடந்த 15 ஆண்டுகளில் வெளியாகும் மூன்றாவது ஸ்பைடர்மேன் குழு இது. இந்த முறை பறவை மனிதன் வல்ச்சருக்கும், ஸ்படைர்மேனுக்கும் நடக்கும் சண்டையில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் 'ஸ்பைடர் மேன்; ஹோம் கம்மிங்' திரைப்படம்.  

Spiderman HomeComing


பேட்மேன் , ஸ்பைடர்மேன் படங்களுக்கு உரித்தான சம்பிரதாயக் காட்சிகளை ஒளிபரப்பாததற்காகவே, இந்தக் குழுவைப் பாராட்டலாம்.பேட்மேன் படங்களுக்கென்றே, சம்பிரதாய ஆரம்பக் காட்சி ஒன்று இருக்கும். சிறுவனான ப்ரூஸ் வெய்ன், தனது பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருப்பான். கொள்ளையர் ஒருவர், அவர்கள் இருவரையும் சுட்டு வீழ்த்திவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்து செல்வார். அதே போல், ஸ்பைடர் மேனுக்கும் ஒரு கதை உண்டு. கொள்ளையர் ஒருவரைப் பீட்டர் பார்க்கர் பார்க்க, அந்தக் கொள்ளையரால் பீட்டரின் உறவினர் கொல்லப்பட, பீட்டரை சிலந்தி ஒன்று கடிக்க, பீட்டர் ஸ்பைடர்மேனாக மாறுவார். இந்தக் காட்சிகள் சீரியல், காமிக்ஸ், படம் என எல்லாவற்றிலும் பலமுறை போடப்பட்டு, ரசிகர்களால் மனப்பாடமே செய்யப்பட்டுவிட்டது. ஸ்பைடர்மேனைப் பின் தொடர்ந்து, பேட்மேன் குழுவும் இந்தக் காட்சிகளை நீக்கினால் சற்று சிறப்பாக இருக்கும் . (பக்கத்தில் இருப்பவர் தலையை சொறிந்தால், நாங்கள் சொல்லிக் கொள்கிறோம்).

Spiderman HomeComing


கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்தில் சில காட்சிகளே, வந்திருந்தாலும், அனைவரின் கவனத்தையும் ஸ்பைடர்மேனாக ஈர்த்திருந்தார் டாம் ஹோலாண்டு. 21 வயதான டாம் ஹோலாண்டிற்கு, கதைப்படி 16 வயது.  கேப்டன் அமெரிக்காவை விட இந்தப் படத்தில் இன்னும் அப்பாவியாகத் தெரிகிறார்.  அதிலும், ஆரம்ப காட்சிகளில் கேப்டன் அமெரிக்கா படத்தில், தான் பங்குபெற்ற சண்டையை , படமாக்கி வைத்திருப்பார் பீட்டர் பார்க்கர். இவ்வளவு ரகளையான ஒரு ஸ்பைடர்மேனைப் பார்த்ததே இல்லை. எதிரிகளிடம் சண்டை போடும் போது, பீட்டர் பார்க்கர் பேசும் வசனங்கள் எல்லாமே செம்ம. அயர்ன்மேன் டோனி ஸ்டார்க்கின் உபயத்தில் ஸ்பைடர்மேனுக்குக் கிடைக்கும் உடையில் இருக்கும் சக்திகளை, அவர் சோதித்துப் பார்க்கும் காட்சிகள் எல்லாமே சிரிப்பலைகள் தான். 


1990களில் டிம் பர்ட்டனின் படங்களில் பேட்மேனாக நடித்த மைக்கல் கீட்டன், பின் 2014ல் இன்னரிட்டோ இயக்கத்தில் பேர்ட்மேனாக மாறி, தற்போது ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படத்தில் பறவை மனிதனாக -  வல்ச்சராக - நடித்திருக்கிறார்.  முதல் காட்சியில் இருந்தே, வில்லனாக வரும் டூம்ஸ் (கீட்டன்) மேல் எந்தத் தவறும் இல்லை போன்ற ஒரு பிம்பத்தை விதைக்கிறார்கள். இறுதிக் காட்சியில், அவன் ஸ்பைடர்மேனைக் காப்பாற்றும் போதும், இதே எண்ணம்தான் வருகிறது. வில்லன் கதாபாத்திரம் மேல், படம் முழுக்க ஒரு பரிதாப நிலைதான் வருகிறது. 

Spiderman HomeComing


இதற்கு முன்பு வந்த ஸ்படைர்மேன் படங்களில், ரயிலை நிறுத்துவது, கடலில் விழ இருக்கும் ரோப் காரை சிலந்தி வலைகளால் பிடித்து நிறுத்த முயற்சிப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும். ஆனால், இதில் ஸ்பைடர்மேன் ஒவ்வொரு முறையும் டூம்ஸிடம் வீழ்வது, அயர்ன்மேன் வந்து காப்பாற்றுவது என இருப்பது, ஏனோ ஸ்பைடர்மேன் மேலிருக்கும் பிம்பத்தை சற்று அசைத்துப் பார்க்கிறது.  அதேபோல், கேப்டன் அமெரிக்காவாக வரும் கிறிஸ் ஈவன்ஸின் ரெக்கார்ட் செய்யப்பட்ட காட்சிகள் சற்றே எரிச்சலூட்டுகிறது. அதிலும் அந்த இரண்டாம் கிரெடிட் சீன் எல்லாம் பார்த்து, சின்னத்தம்பி பட கவுண்டமணி போல், திரையரங்கில் தனி ஆளாக கை தட்ட வேண்டி இருந்தது.  


இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்களைக் குறிவைத்து நடிகர்களையும், சில காட்சிகளையும் வைத்திருப்பது பறந்து விரிந்திருக்கும் ஸ்பைர்மேனின் மார்க்கெட்டைக் காட்டுகிறது. 

இதற்கு முன்பு வந்த அமேசிங் ஸ்பைடர்மேன் வகையறாக்களுக்கு, இந்தப் பாகம் மிகவும் அட்டகாசமாகவே இருக்கிறது.  அடுத்தடுத்த பாகங்களில் டாம் ஹோலாண்டு இன்னும் சிலந்தி வலைகளால் அமர்க்களப்படுத்துவார் என நம்பலாம்.

 

.

 

இந்த ஆண்டு வெளியான மம்மி ரீபூட், ரசிகர்களை அலறி ஓட வைத்தது. இது ஸ்பைடர்மேனுக்கு இரண்டாவது ரீபூட். இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close