Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே! சினிமா இழந்துவிட்ட ஆஸ்கார் நாயகன்

திரைமொழியை தனதாக்கி உன்னத படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவை தரம் உயர்த்தியவர் சத்யஜித் ரே. இவரின் நினைவு தினம் இன்று! போராட்டங்களுக்கு நடுவே தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவரின் முதல் படைப்பு “பதேர்பாஞ்சாலி”.

விபுதிபூஷன் பன்டோபத்யாய் என்பவரின் பதேர்பாஞ்சாலி எனும் நாவலை மூன்று பாகமாக படமாக்கினார் ரே. பதேர்பாஞ்சாலியைத் தொடர்ந்து  Bengali மொழியில் 1956ல் சத்யஜித்ரேவின் EPIC FILMஐ தயாரித்து அவர் இயக்கிய அடுத்த பாகம்  அப்ரான்ஜிதோ (apranjito).  கடைசி பாகமாக வெளிவந்த படம் “அபு சன்சார்” (The world of apu) இந்த மூன்று திரைப்படமுமே “அபு” என்ற சிறுவனின் வாழ்கையைச் சுற்றி சித்தரிக்கும் படம்.

பதேர்பாஞ்சாலியில் அபுவின் குடும்பம், சிறுவயது வாழ்க்கை, அவனின் தங்கையுடனான அன்பு, வீட்டின் வறுமையை சொல்லியிருப்பார். அடுத்தப் பாகமான அப்ராஞ்ஜிதோ அப்புவின் கல்லூரி பருவத்தில் தொடங்கி, அவனோடு வளர்ந்த புல், பூச்சி, மரம், செடி, கொடிகளை அவனால் உட்கிரகிக்க முடியாத குடும்ப அவலத்தை வறுமையை விவரிக்க கூடியதாக படமாக்கினார். அடுத்தப் பாகம் அபு சன்சார், அவனின் வாழ்க்கையின் கடைசி காலங்கள் என்று ஒரு மனிதனின் வாழ்க்கையை மூன்று பாகங்களாக படமாக்கியிருக்கிறார் ரே.

பதேர்பாஞ்சாலி:

வங்க கிராமம், காட்டின் நடுவே வீடு, ஏழை குடும்பங்கள். மூங்கில் மரங்கள், துருபிடித்த இரும்புச் சட்டங்கள், வறுமையிலும் மகிழ்ச்சியாக வாழும் மனிதர்கள், பக்கத்துவீட்டு கொய்யா மரம், ஆச்சரியமாய் பார்க்கும் ரயில் வண்டிகள் இவர்களே ஒவ்வொரு ஃப்ரேமிலும் நம்முடன் உறவாடும் உயிர்கள். பிராமண குடும்பத்தினை சேர்ந்த  அபு எனும் சிறுவன், அவனின் மூத்த சகோதரி துர்கா, இவர்களின் தாய், தந்தை, மற்றும்  இந்திர்பாட்டி இவர்களைச் சுற்றிய கேமராவின் பயணம் இருக்கும்..

துர்காவின் தந்தை கதை எழுதுகிறவர். அதை வைத்து தன் குடும்பத்தினை காப்பாற்ற எண்ணுகிறார்.  துர்காவின்  பிடித்தமான  இந்திர்பாட்டி. அடிக்கடி வீட்டில் சண்டைப்போட்டு வீட்டைவிட்டு செல்வதும் வருவதுமான ஒரு கதாப்பாத்திரத்தில் வலம் வருகிறார் பாட்டி,  கொய்யா பழங்களை திருடி தன்னுடைய இந்திர்பாட்டிக்கு கொடுக்கிறாள் துர்கா, அதற்காக அம்மாவிடம் திட்டும் வாங்குகிறாள். எதை நினைத்தும் கவலைப்படாத சேலை கட்டிய  சிறுமியாக நம் கண்ணில் பட்டுச் செல்கிறாள் சுட்டி பெண்ணான துர்கா. அந்த வேளையில் வேலைத் தேடி துர்காவின் தந்தையார் வெளியூர் செல்கிறார். அபுவின் உலகமாக துர்கா நிற்கிறாள். அபுவின் தாயாக, உற்ற தோழனாக, எல்லாவுமாக இருக்கிறாள் துர்கா. மின்கம்பத்தில் காது வைத்து இரைச்சலை கேட்பது, ரயிலை காட்டுவது, அபுவின் உலகமே துர்காவிற்குள் அடக்கம்.

பலத்த மழையில் துர்காவும் அபுவும்  விளையாடுகிறார்கள். ஆனந்தத்தின் எல்லைக்கே அந்த காட்சிகள் நம்மை இட்டுச் செல்லும். அவர்களின் உலகம் மிகப் பிரம்மாண்டமானது.  மறுநாள் துர்கா உடல் நிலை சரியில்லாமல் போகிறாள். ஏழைக் குடும்பம், மருத்துவத்திற்கு செலவு செய்ய இயலாமல் துர்காவின் தாயார் கைவைத்தியம் செய்கின்றார். தொடர்ந்து உடல் நிலை மோசமடைகிறது. துர்கா இறந்தும் போகிறாள். கடும் மழை, புயலால் வீடே நிலைகுலைந்து போகிறது.

வெளியூர் சென்ற துர்காவின் அப்பா வீடு திரும்புகிறார். துர்காவிற்காக வாங்கிய பட்டுப்புடவையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டே துர்காவை தேடுகிறார். துர்காவின் அம்மா  அழ ஆரம்பித்து விடுகிறாள். விவரம் புரிந்த துர்காவின் அப்பாவும் விழுந்து அழுகிறார், கடைசியாக அவள் முகத்தினை கூட பார்க்க முடியாமல் போன சோகம் அவரின் மனதை நிறைப்பதை காட்சியில் கணமாக விளக்கிச் செல்கிறது.  வீடும் இடிந்து வலுவிழந்து போனதாலும், அந்த வீடே துர்காவின் நினைவுகளில் நிறைந்திருப்பதால் அந்த கிராமத்தை விட்டு அபுவும், அப்பா,  அம்மா மூவரும்  நகரத்தினை நோக்கி செல்வதாக கதை முடிகிறது.

பதேர்பாஞ்சாலி எனும் முதல் பாகத்தில் அபுவின் சிறுவயது துர்காவின் உலகத்தினுள் தேங்கிகிடப்பதை மகிழ்ச்சி, சோகம், உற்சாகம், எல்லா நிலையிலும் படம் காட்டிச் செல்கிறது. அன்றைய ஏழ்மை, மருத்துவத்திற்கு கூட வசதியில்லாத குடும்பங்கள், வேலை தேடி வெளியூர் செல்லும் மனிதர்கள், என்று அன்றைய மனிதர்களின் வாழ்கையை எதார்த்தமாக கருப்பு வெள்ளையில் தந்திருப்பார் சத்தியஜித்ரே, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மாற்றத்தை தரும் இந்த பாதேர்பாஞ்சாலி.

அப்ராஞ்ஜிதோ:

பெங்காலி மொழியில் 1956ல் சத்யஜித்ரேவின் எபிக் ப்ளிம்ஸ் தயாரித்த, ரேயின் இரண்டாவது படைப்பு அப்ராஞ்ஜிதோ. பதேர்பஞ்சாலின் அடுத்த பாகமாக வெளிவந்த திரைப்படம் அப்ராஞ்ஜிதோ.

துர்காவின் மரணத்தில் வெளியூர் செல்லும் அப்பு என்ற சிறுவன், அவனேட அப்பா, அம்மா மூவரும் பனாரஸில் குடியேறுகிறார்கள். அபுவோட அப்பா மத போதகர். பிராமணகுடும்பத்தை சேர்ந்தவங்க. ஏழ்மையின் விழிம்பில் கிழே விழாமல் எப்படியே சமாளித்துக் கொண்டு தன் வாழ்க்கையை நகர்த்தும் சராசரி கருப்பு வெள்ளை குடும்பம். தீபாவளி பண்டிகை, திடீரென அப்புவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அவரின் மனைவி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மறுநாள் வேலைக்கு கிளம்புகிறார். கங்கையில் குளித்து திரும்பும் போது படியிலேயே மயங்கி விழுகிறார். உடல் நிலை ரொம்ப மோசமாகிறது.

கடைசியாக அவர் இறந்தும் போகிறார். குடும்ப பாரம் அப்புவின் தாயிடம் திணிக்கப்படுகிறது. அருகிலேயே வீட்டு வேலை செய்து வாழ்கிறார்கள். கடைசியில் தன் சொந்த ஊருக்கே திரும்புகிறார்கள். அப்பு படிக்க ஆசைப்படுறான். படித்தும் முடிக்கிறான் அபு. மேல் படிப்புக்காக மாதம் 10ரூ சலுகைத் தொகையுடன்  கொல்கட்டாவில் படிக்க வாய்ப்பு கிடைக்குது. பிரிண்டிங்க் பிரஸ்ஸில் வேலை செய்து கொண்டே மேல் படிப்பையும் தொடர்கிறான் அபு.

வறுமையில் உடல் நலம் சரியில்லாமல் தன் மகனை பார்க்க துடிக்கிற தாய். தன் சொந்த கிராமத்திற்கே எப்போதாவது வந்து விட்டு கிராமத்தை விட்டு வெளியே செல்ல துடிக்கும் மகன். அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி வருகிறது. ஊருக்கு சொல்கிறான் அபு. ஆனால் அபுவின் அம்மா இறந்துவிடுகிறார். அங்க இருக்க பிடிக்காமல், கொல்கடாவிற்கே சென்று தன் தாயின் இறுதி சடங்கை செய்து விட்டு புது வாழ்கை ஆரம்பிக்க செல்லும் அபு என்று கதை முடிகிறது. அழுத்தம் நிறைந்த ஈரமான திரைப்படம் அப்ராஞ்ஜிதோ. 11 சர்வதேச விருது விழாக்கள் வரை சென்றிருக்கிறது வாழ்கையின் ரகசியத்தினை சொல்லும் அப்ராஞ்ஜிதோ.

அபு சன்சார்:

அபுவின் மண வாழ்க்கையை சொல்லும் மூன்றாம் பாகம் தான் அபுர் சன்ஸார்.   அம்மாவோட இறப்புக்கு பிறகு கொல்கத்தாவுல வேலை தேடி அலையும் அபு. வேலை கிடைக்காத அந்த சமயம்,  சந்தர்ப்ப சூல்நிலையினால் கல்யாணமும் முடிந்துவிடுகிறது.

மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை, ஊருக்குச் செல்லும் மனைவி பிரசவத்தில் இறந்துவிடுகிறார், குழந்தை மட்டும் பிழைக்கிறது, ஆனால் தன் மனைவி இறந்த சோகத்தில் தன் மகனை பார்க்க விருப்பமில்லாமல் நாடோடியாக சுற்றுகிறார் அபு. கடைசியாக தன் மகனை பார்த்தாரா இது தான் கதை,

பதேர்பாஞ்சாலியா இருக்கட்டும், அபராஞ்சிதேவா இருக்கட்டும், இல்ல அபு சன்ஸாரா இருக்கட்டும் மூன்று பாகத்திலும் யாராவது ஒரு கதாபாத்திரம் இறந்து விடுவது போல் கதையை அமைச்சிருப்பார் ரே.  நம்ம கூட இருக்கும் ஒருவரோட இழப்பு மட்டும் தான் மனிதனின் வாழ்க்கையை திசைதிருப்பும்.  நம்மையும் மாற்றும் சாதாரண மனிதனின் வாழ்க்கையின் அப்பட்டமான படபிடிப்புதான் சத்திய ஜித்ரேவின் சாதனை.

இந்த திரைப்படத்திற்கு ட்சிறந்த தேசிய விருது கிடைத்தது அது மட்டுமின்றி, உலகம் முழுக்க பல விருதுகளையும் இந்த படம் அள்ளியது.

பி.எஸ்.முத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close