Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபாஸ்ட் பார்வர்ட் மோடில் துரைசிங்கம் - நாலு பேரு நாலுவிதமா பேசுறாங்க!

சிங்கம்-3 படத்தின் டீசர் வந்தாச்சு. ஆக்ரோசமான ஆக்சன் படத்திற்கான டீசரா இருந்தாலும், சோசியல் மீடியால கம்பு சுத்துறதுதானே உலகவழக்கம். இதைப்பத்தியும் இந்நேரத்துக்கு நாலுபேர் நாலுவிதமா பேச ஆரம்பிச்சிருக்கணும்ல, அதான் இது!

சிங்கம் சின்னத்தம்பி :
ஹரி-சூர்யா கூட்டணின்னாலே அந்தப் படம் வசூல் வேட்டையாடும்கிறது கோலிவுட்ல யாராலேயும் மறுக்க முடியாது. டீசரை எப்படிக் கலாய்ச்சாலும் முதல்நாள் தியேட்டருக்குப் போய் கைதட்டிப் பார்க்க வைக்கிறதுதான் இந்தக் கூட்டணியோட மிகப்பெரிய வெற்றி. காக்கிச்சட்டை போட்டு துரைசிங்கம் கெத்தா நிற்கும்போது யாரும் குறுக்க வராதீங்க. எதிர்ல எது நின்னாலும் ஏறி மிதிச்சுப் போய்கிட்டே இருப்போம்!

நடுசென்டர் நாகராசு :
'சிங்கம் 3' டீசர் பாத்தேன். எதுக்கு அம்புட்டு வேகமா ஓடுதுனு தெரியலை. ஒருவேளை 2ஜி நெட்வொர்க்ல ஸ்லோவாகப் பார்க்கிறவங்களுக்காக இப்படிப் பண்ணிருப்பாங்களானு தெரியலை. நான் எது கிடைச்சாலும் வேட்டையாடுற ஓநாய் இல்லைனு சூர்யா டயலாக் பேசுறாரு. எது கிடைச்சாலும் ஓநாய் வேட்டையாடுமானு சத்தியமா தெரியலை. ஆனா, எது கிடைச்சாலும் டயலாக்கா வைக்கலாம்னு ஒரு குரூப் கிளம்பியிருக்கிறது மட்டும் நல்லாவே தெரியுது. அதுக்காக டீஸர், ட்ரெய்லர்லாம் நல்லா இருக்கிற படங்கள்லாம் சூப்பரு டூப்பரா ஓடிருச்சுனும் சொல்ல முடியாது. தொடர்ந்து 3 சீக்வல் படங்கள் ஒரே ஆளு நடிச்சு சாதனை பண்ணதுக்காகவே சூர்யாவை நாம பாராட்டலாம். ஹ்ம்ம்.. படம் வரட்டும் வெய்ட் பண்ணலாம்!

பத்ரி பைரவா :
என்னதான் சூர்யா எங்க இளைய தளபதிக்கு ஃப்ரெண்டா இருந்தாலும் இப்படியா காப்பி அடிக்கிறது. கழுத்துல கட்டியிருக்கிற 'டை'யைப் பறக்கவிடுறது 'பைரவா' டீசர்லேயே தளபதி பண்ணிட்டார். ஹைவேஸ்ல நடந்து வர்றது, ஐந்து ஐந்தாய் பிரிந்து வர்றது எல்லாத்தையும் 'புலி உறுமுது...' பாட்டிலேயே பண்ணிட்டார் எங்க அண்ணா. கடைசியில் குதிரையில் வர்ற சீனும் எங்கே இருந்து எடுத்ததுனு 'வேட்டைக்காரன்' போஸ்டரைப் பார்த்தால் தெரியும். பரவால்ல, தளபதி ரெஃபரென்ஸ் இருந்த படம் தோத்ததா சரித்திரமே இல்லை. 'சிங்கம் 3' படம் எங்கள் 'புலி' படம் அளவிற்கு வெற்றியடைய இந்த இளையதளபதி ரசிகனின் வாழ்த்துக்கள்!

ரெட் சுரேஷ் :
'சிங்கம் 3' டீசரில் சூர்யா காட்டுக்கத்தலாகக் கத்திக்கொண்டிருக்கிறார். கார்லேயும், பைக்லேயும் பறந்து பறந்து ஸ்டன்ட் பண்றதுக்கு 'தல'யைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருப்பார் போல. இருந்தாலும் இதே சீன் தல படத்தில் இருந்திருந்தா செம மாஸா இருந்திருக்கும். சும்மா கத்திக்கிட்டேயிருந்தா மட்டும் போதாது சூர்யா... நிமிர்ந்து பார்த்தாலே அப்படியே ச்ச்சும்மா விசில் பறக்கணும். 'பில்லா', 'ஆரம்பம்' டி.வி.டி-லாம் வாங்கி வீட்டில் உட்கார்ந்து பார்த்துட்டு அப்புறமா வாங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close