Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓகே கண்மணி... காற்று வெளியிடை... ரெண்டு டிரெய்லருக்கும் இந்த 4 ஒற்றுமை கவனிச்சீங்களா?! #VikatanExclusive

ணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தின் டிரெய்லருக்கும் இப்போ ரிலீஸான 'காற்று வெளியிடை' படத்தின் டிரெய்லருக்கும் இருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு! நாங்களே லிங்க்கும் கொடுத்திருக்கோம். பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்! 

காற்று வெளியிடை

தூரத்திலிருந்து கான்வோ :

ரேஷன் கடை போல கூட்டம் கும்மும் இடத்தில் ஹீரோவும் ஹீரோயினும் தூரத்தில் இருந்து 'பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும்' இருப்பார்கள். 'காற்று வெளியிடை' டிரெய்லரில் கார்த்தி, அதிதி ராவ் இருவரும் தூரத்திலிருந்து பேசிக்கொள்வார்கள். கார்த்தி 'மனசு மாறுச்சுன்னா... நெக்ஸ்ட் சாட்டர்டே... 5 பி.எம்... ஃப்ளைட்ல?' என்பார். அதற்கு அதிதி, 'ஆபீஸருக்கு காது கேட்காதா?' என்று கேட்பார். மறுபடியும் கார்த்தி, 'டாக்டருக்கு மனசு மாறாதா?' எனக் கேட்பார். அதே மாதிரியான காட்சி 'ஓ காதல் கண்மணி' படத்திலும் இடம்பெற்றிருக்கும். ஹீரோ துலகர் சல்மான் நித்யா மேனனைப் பார்த்து 'ஆதி' என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்லுவார். அதற்கு நித்யா மேனன் 'தாரா' என்று ஹஸ்கி வாய்ஸில் ரிப்ளை செய்வார். இது அதுல்ல...

 

கண்ணம்மா - கண்மணி சென்டிமென்ட்:

காற்று வெளியிடை படத்தில் ஹீரோ கார்த்தி மலையை நோக்கி 'காற்று வெளியிடை கண்ணம்மாஆஆஆ' என்று ஹை பிட்ச்சில் கத்துவார். இந்தப் பக்கம் படம் பெயரே ஓ.கே கண்மணிதான். படத்திலும் ஹீரோ துல்கர் அடிக்கடி கண்மணி கண்மணி என சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் படத்தில் நித்யா மேனனின் பெயர் 'தாரா'. கண்மணி அவரின் செல்லப்பெயர். ரயில், கல்யாண பாட்டு மாதிரி 'கண்' மேலயும் மணிசாருக்கு ஒரு கண்ணு போல. அடுத்த படத்தில் கப்பு'னு பிடிச்சுடலாம்.

 

புல்லட்:

'காற்று வெளியிடை கண்ணம்மா' என்று கத்தும்பொழுது அருகே ஹீரோயின் நின்று கொண்டிருப்பார். அப்படியே இன்னும் கொஞ்சம் ஜூம் பண்ணிப் பார்த்தால் சிவப்பு கலர் 'ஷோக்காளி' நிற்கும். அட அதான் பாஸ் 'ராயல் என்ஃபீல்டு' பைக். அப்படியே ஓ.கே கண்மணி டிரெய்லருக்கு வந்தால் துல்கரும், நித்யா மேனனும் டான்ஸ் ஆடிக்கொண்டே அந்த புல்லட் பைக்கில் ஊரை ரவுண்ட் அடித்துக்கொண்டு இருப்பார்கள். (கபாலி கண்ணாடியை அப்போதே நித்யா மேனன் போட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்). புல்லட் பைக்கை யாரு அதிகமா காட்டுறதுன்னு மணிரத்னத்துக்கும் கெளதம் மேனனுக்கும் போட்டியே நடக்கும் போல.

 

 

ஹை பிட்ச் அலறல்:

இரண்டு டிரெய்லரிலும் இருக்கும் கடைசி ஒற்றுமை இது. ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேருமே ஹை பிட்சில் ஒரு ஷாட்டில் அலறுவார்கள். 'காற்று வெளியிடை' டிரெய்லரில் ஃப்ளைட்டில் வரும்போது ஹீரோயின் ஜாலி மோடில் கத்துவார். அது முடிந்ததும் ஹீரோ கார்த்தி மலையை நோக்கி 'காற்று வெளியிடை கண்ணம்மாஆஆ' எனக் கத்துவார். அப்படியே இந்தப் பக்கம் 'ஓ.கே கண்மணி' டிரெய்லருக்கு வருவோம். இதில் நித்யா மேனன் கார் ஓட்டிக்கொண்டு வருவார். அந்த சீனில் இரண்டு பேருமே 'ஹோஓஓ' எனக் கத்துவார்கள்.

நல்லா பாருங்க பாஸ்! இரண்டு டிரெய்லரிலும் ஜிப்ஸி கூட வரும். என்ன, ஓ.கே.கண்மணியில் வெள்ளை கலர், காற்று வெளியிடையில் கருப்பு கலர் ஜிப்ஸி. ஆனா, ஜிப்ஸி ஜிப்ஸிதானே! 

 

- தார்மிக் லீ

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close