Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அது நம்ம ரமணா இல்ல' - அனிருத்தைப் போல் இருக்கும் இவர் யார்?

லகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். என்னதான் முக வெட்டு ஒரே மாதிரி இருந்தாலும் காது, மூக்கு, வாய், தொண்டைனு எதாவது ஒண்ணு வேற மாதிரி இருக்கும் இல்லையா. ஆனால், இந்த மேட்டரைப் பாருங்க. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் மியூஸிக் டைரக்டர் அனிருத். அவரை மாதிரியே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபரின் போட்டோ சோஷியல் மீடியாவுல பயங்கர வைரலாகிட்டு வருது. உண்மையிலேயே யாருய்யா இவருனு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணதுல கிடைச்ச தகவல்கள் தான் இது...

அனிருத்

அவரோட உண்மையான பெயர் ஃபர்ஸ்ரி எக்கபெல். மலேசியாவில் காலேஜ் படிச்சிட்டு இருக்கார். ஃபேஸ்புக்ல எந்தப் பக்கம் போனாலும் இவரோட படத்தை அப்லோடு பண்ணி `அனிருத் மாதிரியே இருக்கார்'னு பரப்பிவருகிறார்கள் நெட்டிசன்கள். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கே தெரியவந்து மிகவும் கடுப்பாகி, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸை தட்டியிருக்கிறார்.

''ஸப்பா... கடந்த சில நாட்களாக என்னென்ன கூத்தோ நடந்து போச்சு. என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப பிஸியாக இருந்த வாரமும் இதுதான், மோசமான வாரமும் இது தான். ஆமாம், என் போட்டோ எல்லாம் வைரல் ஆகிடுச்சு. ஆனால், எனக்கு அதில் எல்லாம் சுத்தமா ஆர்வமே கிடையாது. இதெல்லாம் எனக்கு தேவையில்லாத ஒண்ணு. என் போட்டோக்களுக்கு சிலர் வந்து செய்கிற கமென்ட்டுகள் என்னை ரொம்பக் கடுப்பாக்குது. மீசை,தாடியை ஷேவ் பண்ண சொல்றாங்க, கண் லென்ஸ் மாத்திக்க சொல்றாங்க. மோசமா கலாய்ச்சு கமென்ட் பண்றாங்க. ஹலோ, நான் இப்படித்தான் இருப்பேன். எனக்கு பிடிச்சமாதிரி தான் நான் இருக்கமுடியும். நான் நானாகவே இருக்க ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த மாதிரி விஷயம் சமூக வலைதளங்களில் நடந்துட்டு இருக்குங்கிறதை என் பார்வைக்கு கொண்டு வந்த என் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி."  என உச்சகட்ட வெறுப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்துல  போஸ்ட் போட்டுருந்தார்.

அனிருத்

பாவம் பாஸ் அவரு, ரொம்ப ஃபீல் ஆகிட்டாப்ல. அனிருத் மாதிரி இருக்காருங்கிற ஒரே காரணத்துக்காக அவரு கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் இவருக்கு இன்பாக்ஸில் அனுப்பி வெச்சா அவரும் என்ன தான் பண்ணுவார். உண்மையைச் சொல்லனுமா, அந்த கேள்விகளையெல்லாம் அனிருத் கிட்ட கேட்டால் அவரே அதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டார். அதுவும் எக்கபெல் இந்தியாவுல கூட இல்லை. மலேஷியாவுல எங்கேயோ ஒரு மூலையில காலேஜ் படிச்சிட்டு இருக்கார். பாவத்த... இனி செல்ஃபி எடுக்கும்போதெல்லாம் இந்த ஞாபகம் தானய்யா வரும்...

இது சம்பந்தம்மா எக்கபெலிடம் பேசலாம் என அவரது நண்பரை பிடித்து எக்கபெலுக்கு மெசேஜ் செய்தால், ரிப்ளையே வரவில்லை. அடுத்த சில நேரங்களிலேயே எக்கபெல் தனது பேஸ்புக் பக்கத்தையும் டி-ஆக்டிவேட் செய்துவிட்டார். இந்தப் பாவமெல்லாம் நம்மள சும்மா விடாது மகாஜனங்களே!

 

- தார்மிக் லீ

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close