Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாமனிதனுக்காக இளையராஜா - யுவன் இணைந்து இசையமைக்கிறார்களா? - சீனு ராமசாமி விளக்கம்

ளையராஜா  எதற்கும் பிடி கொடுக்க மாட்டார், இளகவும் மாட்டார் ஆனால் எம்.எஸ். விஸ்வநாதன் பெயரையோ, இசையையோ பற்றிப் பேசும்போது மட்டும் நெகிழ்ந்துபோய் கரைந்துவிடுவார். இளையராஜா முதன்முதலாக  எம்.எஸ்.வி-யோடு இணைந்து இசையமைத்த திரைப்படம் 1986-ம் ஆண்டு வெளிவந்த 'மெல்ல திறந்தது கதவு'.  அதன்பின் இளையராஜா யாரோடும் இணைந்து இசையமைக்கவில்லை. 21 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகன் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் 'மாமனிதன்' படத்துக்காக யுவனுடன் இணைந்து இசையமைக்கிறார் என்று ஒரு தகவல் உலா வருகிறது. இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமியிடம் பேசினோம்.

யுவன் இளையராஜா

 'மாமனிதன்' திரைப்படத்தின் கதை  

"  'மாமனிதன்'  திரைப்பட  தயாரிப்பு அமைந்ததே தனிக்கதை.  விஜய்சேதுபதி நாயகனாக நடிப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துத் தயாரிப்பதாகவும்  முடிவானபின்னர் என்னை இயக்குனராக முடிவுசெய்து என்னிடம் தெரிவித்தனர். என்னுடைய படங்களில்  சூப்பர் ஹீரோக்களை எப்போதுமே காட்டியது இல்லை. என்னுடைய எல்லாப் படங்களுமே சாமன்ய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவைதான்.  'சத்திய சோதனை' புத்தகத்தில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று எழுதினார் மகாத்மா காந்தி. தனது 'வனவாசம்' சுயசரிதையில் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்று எழுதிவைத்தார், கண்ணதாசன். இந்த இருவரின் சுயசரிதையில் சொல்லப்படும் சாராம்சமே என்னுடைய  'மாமனிதன்'படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தில் எதிரொலிக்கும்.

கதாநாயகன் விஜய்சேதுபதி

சீனு ராமசாமி

எனக்கும், விஜய்சேதுபதிக்கும் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில்  பிறையாக  துவங்கிய நட்பு இப்போது பெளர்ணமியாக பூரணத்துவம் பெற்று வருவது குறித்து  எனக்குள் எப்போதுமே நெகிழ்வும், மகிழ்வும் உண்டு.  சினிமா படப்பிடிப்பு இல்லாத தருணங்களில்கூட சேதுபதியை தனிமையில் சந்திக்கும்போது நான் தயார் செய்து வைத்திருக்கும் கதைகளை மனம்விட்டுப் பேசுவேன். அப்போது என்னுடைய கதைகளை ஏனோ தானோ என்று கேட்காமல் கூர்ந்து கேட்டு அவ்வப்போது ஆலோசனைகளையும் தன்னுடைய கருத்தையும் தயங்காமல் என்னிடத்தில் வெளிப்படையாக சொல்லக்கூடியவர், சேதுபதி. இப்போதுகூட என்னிடத்தில் உள்ள மூன்று படங்களின் கதை அவருக்கு நன்றாகத் தெரியும். இதுதான் எங்களுக்குள் இருக்கின்ற ஆழமான நட்பு.

 நான்  இயக்கும் 'மாமனிதன்' படத்துக்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கரும் இணைந்து இசையமைக்க போவது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முடிவாகாமல் முந்திரிக் கொட்டைத்தனமாக நான்  தெரிவிப்பது முறையாகாது. 'மாமனிதன்' படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரே இதுகுறித்து விரைவில் அறிவிப்பார்" என்கிறார் சீனு ராமசாமி.

மடைதிறந்து பாயட்டும் இசைமழை!                

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close