Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெளதமைத் துரத்தும் த்ரிஷா?

த்ரிஷா தமிழில் கடைசியாகக் கொடுத்த ஹிட் படம், 'விண்ணைத் தாண்டி வருவாயா.' கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.

அதன்பிறகு கமலுடன் நடித்த 'மன்மதன் அம்பு', விஷாலுடன் நடித்த 'சமர்' இரண்டு படங்களுமே ஊத்திக் கொண்டன.

இதனால் 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெஸி போல ரசிகர்களின் மனதில் இருந்த நீங்க முடியாத கேரக்டரில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறார்.

இந்த நிலையில் தான், சூர்யாவை வைத்து கெளதம் மேனன் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்பட்டது.

ஆனால், 'த்ரிஷா வேண்டாம்' என சூர்யா கூறியதாகவும், அதன்பிறகு அமலா பால், துளசி, சமந்தா என வரிசை கட்டிய ஹீரோயின் குழப்பங்களும் கோடம்பாக்கம் அறிந்ததே.

திடீர் திருப்பமாக சூர்யாவுக்கு திரைக்கதையில் திருப்தி இல்லாததால், படம் தற்போதைக்கு டிராப் ஆகிவிட்டதாகக் கூறப்பட்டது. சூர்யாவும் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

இப்போது சரத்குமாரை வைத்து ஆக்‌ஷன் படத்தை கெளதம் மேனன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள சரத்குமார், 'அது 'துருவ நட்சத்திரம்' கதையா என்பது எனக்குத் தெரியாது' எனத் தெரிவித்தார்.

சரத்குமாரை இயக்கும் படத்திற்குப் பிறகு சிம்புவை கெளதம் மேனன் இயக்கப் போகிறார் எனவும், அது 'துருவ நட்சத்திரம்' கதை எனவும் தற்போது புதிய தகவல்கள் கோலிவுட்டில் வலம் வருகின்றன.

இந்த இரண்டு படங்களிலும் எப்படியாவது ஹீரோயினாக நடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக வேலைபார்த்து வருகிறார் த்ரிஷா. கெளதமும் தன்னுடைய பழைய நாயகிக்கு வாய்ப்பு தருவார் என்று கூறப்படுகிறது.

தற்போது 'ஜெயம்' ரவியுடன் 'பூலோகம்', ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னகை', தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் 'ரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close