Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கிளாமர் பண்ணமாட்டேன்”

'நாடோடிகள்’ படத்தில் ஜிங்கு ஜிங்கு என்று குத்தாட்டம் ஆடியதில் தமிழ் ரசிகர்கள் மனதில் பெரிய பள்ளத்தையே ஏற்படுத்தியவர் நாகு. அவரைச் சந்தித்தபோது...

 

''குத்துப்பாடல்களில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நீங்கள் இப்போது நடிக்கிறீங்களாமே?''

''ஆமாம். உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிக்கும் 'நண்பேன்டா’ படத்தில் காமெடி ரோல்ல நடிக்கிறேன். செம ஹேப்பியா இருக்கேன்.''

''டான்ஸர்னா ஒல்லியா இருப்பாங்க... நீங்க எப்படி இப்படி?''

''சோலோ பர்ஃபாமென்ஸுக்கு முன்னாடி குரூப் டான்ஸ்தான் ஆடிட்டு இருந்தேன். டயட்ல எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால இந்த உடல்வாகு.''

'' 'நாடோடிகள்’ சான்ஸ் எப்படி கிடைச்சது?''

''குரூப் டான்ஸ் ஆடப் போயிருந்தபோது டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்கிட்ட டைரக்டர் சமுத்திரகனி சார், ஒரு குத்துப்பாட்டு இருக்கு. இந்தப் பொண்ணு ஆடினா நல்லாருக்கும்னு சொல்லியிருக்கார். தினேஷ் மாஸ்டர் என்னை அந்தப் பாட்டுக்கு ஆடச் சொன்னார். நான் ரொம்பத் தயங்கினேன். தினேஷ் மாஸ்டர்தான் தைரியம் கொடுத்து ஆடச் சொன்னார்.''

''தமிழைத் தவிர வேற மொழிகளில் சான்ஸ் வருகிறதா?''

''கிளாமர் பண்ண மாட்டேன் என்கிறதால வேற மொழிப் படங்களில் கமிட் பண்ணிக்கிறதில்ல. தெலுங்கு வாய்ப்பு நிறைய வருது. நான்தான் தவிர்த்துட்டுவர்றேன். குரூப் டான்ஸராக இருக்கும்போதும் கொஞ்சம் கிளாமரான டிரெஸ் போட்டு ஆடியிருப்பேன். ஆனா, சேலை கட்டி ஆடி ஹிட்டான பிறகு தமிழில் வரும் சான்ஸே போதும்.''

''ஒரு நல்ல பாட்டு, கஷ்டப்பட்டு ஆடியிருப்பீங்க... ஆனா படம் வராமலோ பெரிய ஹிட்டாகாமலோ போயிட்டா எப்படி இருக்கும் உங்க ஃபீலிங்?''

'' நான் நடிக்கிற எல்லாப் படமுமே நல்லா ஓடணும்னுதான் வேண்டிக்குவேன். உதாரணத்துக்கு 'சுண்டாட்டம்’ படத்தில் கஷ்டப்பட்டு ஆடினேன். ஆனா படம் ஆவரேஜாத்தான் போச்சு. அது மாதிரி ஆயிடுச்சுனாதான் மனசுக்குக் கவலையா இருக்கும்.''

''குத்துப்பாட்டுக்கு ஆடுறதை வீட்ல எப்படி எடுத்துக்கிறாங்க?''

''அப்பாவும் காஸ்ட்யூம் டிஸைனரா சினிஃபீல்டுல இருக்கிறவர்தான். நான் கிளாமரா ஆடுறதில்லைங்கிறதால பெரிய பிரச்னை இல்லை. சேலை கட்டி கிளாமர் இல்லாம ஆடுறதுனா கமிட் பண்ணிக்கோனு சொல்லிட்டார்.''

''யாரையோ லவ் பண்றீங்கனு நியூஸ் கிளம்பிச்சே?''

''இதெல்லாம் ரொம்ப டூமச். ஏதோ இப்பதான்  நடிக்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு. அது யாருக்கோ பொறுக்கலை. வதந்தியைக் கிளப்பிவிட்டுட்டாங்க. இன்னும் ரெண்டு வருஷம் ஒன்லி சினிமாதான். உண்மையைச் சொல்லணும்னா காதல், கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கக்கூட நேரமில்லை அண்ணா!''

என்னது... அண்ணாவா!

- செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close