Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘அஜித் சாரு ஃபேனு நான்!’’ - ‘டங்காமாரி’ பாடலாசிரியர் ரோகேஷ்

‘டங்காமாரி ஊதாரி’ என்று தமிழகத்தையே ஆடிப் பாட வைத்த, அப்பாடலாசிரியர் ரோகேஷின் அனுபவங்கள் ஒவ்வொன்றும், நம்மை வடசென்னைக்கு அழைத்துச் செல்கிறது!

‘‘சென்னை, வியாசர்பாடி, கணேசபுரம்தான் நான் பொறந்து வளர்ந்தது எல்லாம். பசங்களாண்ட ஜாலி பண்ணினு, ஒன்பதாம் கிளாசோட படிப்ப டிஸ்கன்யூ பண்ட்டேன். அதுக்கப்புறம் என்னோட ஃபிரண்ட்ஸூங்களுக்கு பாட்டெழுதி கொடுத்துனு இருந்தேன். பாரீஸ் கார்னராண்ட ஒரு கம்பெனியில வேல பாத்தேன். நேரம் கிடைக்கிறப்போலாம் பார்க்கு, பஸ் ஸ்டாண்டுனு பாட்டெழுதினே இருப்பேன்.’’

‘‘நீங்க எழுதின ‘டங்காமாரி’, ‘டண்டணக்கா’ ரெண்டும் சூப்பர் ஹிட். எவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க.?!’’

‘‘எனக்குப் படத்துல பாட்டெழுதுறது ரொம்பப் புட்சிருக்கு. ஆனா ரொம்பப் பாராட்டினா அதுல மெச்சுப் போயிருவேனோனு எங்கப்பாவும் அம்மாவும் என்னை ஓபனா பாராட்டக்கூட மாட்டாங்க. அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரி, வெற்றி, தோல்வி ரெண்டுலயும் நிதானமா இருக்கப் பழகிக்கிட்டேன்!’’

‘‘எப்போ பாட்டு எழுத ஆரம்பிச்சீங்க?’’

‘‘2013ல, என்னோட தோஸ்துங்க முத்து, குணா ரெண்டு பேருக்கும் கேசட்டுக்கு பாட்டெழுதி கொடுத்தேன். அப்படி அஞ்சாறு ஆலப்த்துக்கு பாட்டு எழுதியிருக்கேன். அது நல்லா ரீச்சு ஆச்சு. அப்டியே பாஸாகி பாஸாகி ஆர்ட் டிரக்டர் கிரண் மூலமாத்தான் கே.வி ஆனந்த் சார் படத்துல பாட்டு எழுதுற வாய்ப்புக் கெடச்சுச்சு. அடிக்கடி வேலைக்கு லீவு போட்டு பாட்டெழுதுறதால, திட்டுவாங்கனு இதையெல்லாம் வீட்டுல சொல்றதே இல்ல. டி.வியில ‘அநேகன்’ ஆடியோ ரிலீஸ் பார்த்தபாதான் அவங்களுக்கே தெரிஞ்சுது.’’

‘‘வேறென்ன பிடிக்கும் ரோகேஷுக்கு?’’

‘‘தல தல தல! சின்ன வயசுல இருந்தே நான் அஜித் ஃபேன். செல்ஃபோன்ல நெட்டுக்கார்டு போட்டா முதல்ல பார்க்குறது தல பத்தின நியூஸூதான். தல பட ரிலீஸ்னாலே நாங்க ஒரு மாதிரி ஆகியிடுவோம். கட் அவுட் வைக்கிறது, பாலாபிஷேகம் பண்றதுனு கலக்கிடுவோம். குட்டித் தல பொறந்ததுக்காக எங்க கேங்க் எல்லாரும் பிளட் டொனேட் பண்ணோம். அவரை நேர்ல பாத்தா அவர்கூட ஒரு ஃபோட்டோ புடிக்கணும்.’’

‘‘அஜித் பட வாய்ப்பு எதுவும் வந்ததா..?’’

‘‘அதக் கேளுங்க. ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக கௌதம் மேனன் சார், கே.வி. ஆனந்த் சார்கிட்ட என்னைப் பாட்டெழுதி தரச்சொல்லிக் கேட்டிருக்காரு. அந்த டைம் பாத்து என் ஃபோனு ரிப்பேரு. ஃபோன் சரியானதுக்கு அப்புறம் கே.வி. ஆனந்த் சார்கிட்ட பேசினப்போ, ‘இப்படி ஒரு வாய்ப்ப மிஸ் பண்ணிட்டியேப்பா’னு சொல்ல, கண்ணீரே வந்திருச்சு!’’

‘‘பாடலாசிரியர்கள்ல யாரைப் பிடிக்கும்?’’

‘‘நம்ம வாலி சாரு!’’

‘‘ ‘ரோமியோ ஜூலியட்’ ‘டண்டணக்கா’ பாடல் அனுபவம்?’’

‘‘வாழ்ந்தா ஒருத்தருக்காக, ஒருத்திக்காக வாழணும்ங்கற கான்சப்ட்ல வர்றதுதான் அந்தப்படம். அதனாலதான் டி.ஆர். கான்சப்ட வச்சு ஒருபாட்ட எழுதிக் கொடுக்கச்சொல்லிக் கேட்டாங்க. அவரோட ரைமிங்லதான் வரிகள் வரணும்னு சொல்லி எழுதினேன். அந்தப் பாட்டுல ஒரு சீன்ல டி.ஆர். வர்றதா சொன்னாங்க. அதை வச்சுதான் எழுதினேன். அவரு எவ்வளவு பெரிய பெர்சனாலிட்டி தெரியுமா..? என் அப்பா, தீவிர டி.ஆர். ரசிகர். அவரு சின்ன வயசுல இருக்கச்சொல்லோ, டி.ஆர். மாதிரி தாடி, முடி எல்லாம் வளர்த்துட்டு இருப்பாராம். ரசிச்சு ரசிச்சு எழுதினேன் அந்தப் பாட்டை!டி.ஆர் நோட்டிஸ் அனுப்பியிருக்காப்லனு டைரக்டர் சொல்லி தான் தெரியும்.அதுல இன்னா கீதுனு கூட தெரிலையே.

‘‘கானா பாட்டு ஸ்டைல் பற்றி..?’’

‘‘கானாப் பாட்டுங்றது வெறுமனே சோகம் மட்டுமில்ல. எழவு வீட்ல இருக்கறவங்க பேர்ல பாட்டா பாடனாக்கா ரொம்பவும் சோகமா இருக்கவானாமேனுதான் சிரிக்க  வைக்கவும் சில லைன்ஸ் சேர்த்துப் பாடுவோம். அது ரசிக்கிறபடியும் இருக்கும். இப்போ கானாப் பாட்டு பல பேராண்ட போய்ச் சேர்ந்திருக்கு. சினிமாவுக்கு தேங்ஸ்!’’

-வே. கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close