Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மூன்றுமுகம்’ ரஜினி, ‘பைரவா’ டைட்டில், ‘சூப்பர் ஹீரோயின்’ ரித்திகா! - லாரன்ஸ் பேட்டி

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், ரஜினியின் மாஸ் ஹிட்டான மூன்றுமுகம் படத்தை ரீமேக் செய்கிறார் என்ற செய்தி தான் இன்றைய டாப் ட்ரெண்டிங். தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா என பிஸியாக இருக்கும் லாரன்ஸ், மூன்றுமுகம் படத்தை எப்போது எடுப்பார், தற்போது எடுத்துவரும் படங்கள் எந்த நிலையில் உள்ளது என சில கேள்விகளோடு லாரன்ஸை தொடர்பு கொண்டோம். 

மூன்று முகம் ரீமேக் எப்போ ஸ்டார்ட் பண்றீங்க..?

மொட்ட சிவா கெட்ட சிவா படம் ஃபுல்லா முடிஞ்சிருச்சு. சிவலிங்கா படத்தோட ஒரு சண்டை காட்சி மற்றும் இரண்டு பாடல்கள் பாக்கியிருக்கறதுனால அதை முடிச்சிட்டு இன்னும் ஒரு மாசத்துல மூன்று முகம் படத்தை ஆரம்பிச்சிடுவேன். இன்னும் இந்த படத்துக்கு யார் ஹீரோயின், டைரக்டர், டெக்னிக்கல் டீம்னு எதுவும் முடிவு பண்ணலை. அதே மாதிரி இந்த காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி மூன்றுமுகம் படத்தையும் அலெக்ஸ்பாண்டியன் கேரக்டரையும் மாற்றணும். அதுக்கான வேலைகள் போயிட்டு இருக்கு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு ஷூட்டிங் போவோம்.” 

ரீமேக் பண்றதுக்கு ரஜினி என்ன சொன்னார்..?

“ரொம்ப சந்தோஷப்பட்டார். எந்த விஷயத்தையும் அவரோட ஆசீர்வாதத்தோடு தான் பண்ணுவேன். அதே மாதிரி மூன்றுமுகம் படத்தையும் அவரோட ஆசீர்வாதத்தோடு ரீமேக் பண்றேன்.”

நீங்க ரஜினியை டைரக்ட் பண்ணப்போறதா தகவல் வந்துச்சே..?

“அப்படியெல்லாம் இல்ல.”

மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா படங்கள் எப்படி வந்திருக்கு, எப்போ ரிலீஸ்..?

“மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை டிசம்பர் 23-ம் தேதி ரிலீஸ் பண்ணலாம்னு பேசிட்டு இருக்கோம். சிவலிங்கா ஜனவரி 26ம் தேதி ரிலீஸ். இரண்டு படமுமே ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. மொட்ட சிவா கெட்ட சிவா தெலுங்குலையும், சிவலிங்கா கன்னடத்திலையும் ஆல்ரெடி ஹிட்டான படங்கள் தான். இரண்டு படத்துலையும் காமெடி, ஆக்ஷன் ரொம்ப நல்லா வந்திருக்கு, பெருசா பேசப்படும்.”

சிவலிங்கா படத்துல ரித்திகாசிங் ஒர்க் எப்படியிருக்கு..?

“ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க. அவங்க ஒரு பாக்ஸர் தான், ஆனாலும் அவங்களுக்கு நடிப்பு ரொம்ப நல்லா வருது. சிவலிங்கா படத்துல அவங்களுக்கு ஆக்ஷன் இல்லை. ஆனால், சந்திரமுகி படத்துல எப்படி ஜோதிகா கேரக்டர் முக்கியமானதோ, அதே மாதிரி ரித்திகாசிங் கேரக்டர் சிவலிங்கா படத்துக்கு முக்கியம்.”

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் நான்காம் பாகத்தை எடுக்கும் முதல் இயக்குநர் நீங்க தான். எப்படியிருக்கு இந்த ஃபீலிங்..?

“நான் முனி படம் எடுக்கும் போது இந்த அளவுக்கு வரும்னு தெரியாது. எல்லாம் கடவுளோட அருள். இப்போ இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். மூன்று முகம் படத்தை முடிச்சிட்டு முனி படத்தின் நான்காம் பாகத்திற்கான வேலைகளில் இறங்குவேன்.” 

இப்போ உங்களோட தம்பியும் ஹீரோவாமே..?

“சில கதைகள் கேட்டான். இப்போ தான் ஒரு கதை செலக்ட் பண்ணினோம். அதுக்கான ஸ்க்ரிப்ட் ஒர்க் நடந்திட்டு இருக்கு. இன்னும் 2 மாசத்துல அந்த படத்திற்கான அறிவிப்பும் வரும்.” 

விஜய் நடிக்கும் பைரவா படத்தின் டைட்டில் பற்றி..?

நான் பதிவு பண்ணி வெச்சிருந்த டைட்டில் தான் அது. அதுக்கப்பறம் அவங்களுக்கு கொடுத்துட்டேன். அவ்வளவு தான்.” 

மா.பாண்டியராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close