Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘எப்பவும் என் வாழ்க்கை என் கைல!’ - ஸ்ட்ரிக்ட் ஸ்ருதி ஹாசன்

 'பெஹன் ஹோகி டேரி'...  ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லேட்டஸ்ட் பாலிவுட் படம். தன்  அப்பா கமல்ஹாசன் அந்தப் படத்தை பார்ப்பதற்காக ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அதற்காக மும்பையிலிருந்து பறந்து வந்த ஸ்ருதியுடன் பேசுவதற்கு  நேரம் கிடைத்தது.

ஸ்ருதி ஹாசன்

அப்படி என்ன ஸ்பெஷல் இந்தப் படத்தில்?

“அப்பாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. என் கேரியர்ல அப்பா எப்போதும் எனக்குப் பெரிய சப்போர்ட்டா இருந்திருக்கார். இந்தப் படத்தை அப்பாகூட சேர்ந்து பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அந்தச் சாக்குல அவர்கூட ரெண்டு, மூணு நாள் இருக்கலாம்ங்கிறதுதான் பிளான். அடுத்து என்னோட மியூசிகல் கொலாபரஷேன் வொர்க்குக்காக லண்டன் போறேன். உக்கார நேரமில்லை, லைஃப் செம ஸ்பீடா ஓடிக்கிட்டே இருக்கு....” உற்சாகம் குறையாமல் பேசுகிறார் ஷ்ருதி.

மும்பையிலயே செட்டிலாயிட்டீங்க போல? சென்னை பிடிக்கலையா?

''சேச்சே அப்படி இல்லை. மும்பையிலயும் சென்னையிலயும் எனக்கு வீடு இருக்கு. ரெண்டு இடங்கள்லயும் மாறி மாறி இருக்கேன். ஹிந்திப் படங்கள் பண்றதால மும்பையிலயே செட்டிலாயிட்டீங்களானு கேட்கறாங்க. ஆக்சுவலி, நான் தமிழ், தெலுங்குப் படங்கள்தான் அதிகம் பண்றேன். இந்த மூணு ஊர்களோடவும் எனக்கு ஸ்பெஷல் கனெக்ட் இருக்கு.''

பாடகியா, இசையமைப்பாளரா இன்டஸ்ட்ரிக்கு அறிமுகமானீங்க... அப்புறம் நடிகை அவதாரம். ஸ்ருதிக்குள்ள இருந்த இசைக்கலைஞர் எங்கே?

‘‘எங்கேயும் போகலை. இங்கேயேதான் இருக்காங்க. சமீப காலத்துல மியூசிக்ல ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணலை. இதுவரைக்கும் நான் என்னோட படங்களுக்கும் மத்த சில படங்களுக்கும் பின்னணி இசை நிறைய பண்ணிட்டிருந்தேன். கடந்த சில வருஷங்கள்ல ஒரு வருஷத்துலயே நாலஞ்சு படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அதுக்கு நடுவுல மியூசிக்கைப் பார்க்கறது கஷ்டமா இருந்தது. ப்ளேபேக்குங்கிறது டைம் டேபிள் போட்டு வொர்க் பண்ற வேலையில்லை. கூப்பிட்டா அடுத்த நாள் ரெடியா இருக்கணும். ஷூட்டிங், டிராவல்னு பிசியா இருந்ததால என்னால பண்ண முடியலை. இப்போ இந்தியாவைத் தாண்டியும் வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். ஏ.ஆர். ரஹ்மான் சார் கூட சேர்ந்து பாடற வாய்ப்பு கிடைச்சது. அது மறக்க முடியாத அனுபவமா அமைஞ்சது. மியூசிகல் கொலாபரேஷன்ஸ் நிறைய பண்ற ஐடியா இருக்கு... சீக்கிரமே பழைய ஸ்ருதியை நீங்க பார்க்கலாம்....''

பாடகி, இசையமைப்பாளர், நடிகை... இதை எல்லாம் தாண்டி ஸ்ருதிக்கு வேறு முகங்கள் உண்டா? 

“இருக்கு... எனக்கு எழுதப் பிடிக்கும். டைம் கிடைக்கும்போது எழுதுவேன்.''

ஸ்ருதி ஹாசன்


ஸ்ருதி நடிகையாகணும்னு என்கிற முடிவை யார் எடுத்தது? 

“என் வாழ்க்கையில எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன். எஸ். எப்பவும் என் வாழ்க்கை என் கைலதான்! நடிப்பும் அப்படித்தான். பெரிய பிளானெல்லாம் பண்ணலை. தப்பித் தவறி நடிகையானேன்னுதான் சொல்லணும். லைஃப்ல நிறைய விஷயங்கள் அப்படித்தான் பிளான் பண்ணாமலேயே நடக்கும். சினிமாங்கிறது எங்க குடும்பத்துல எப்பவுமே இருந்திருக்கு. முதல் பட வாய்ப்பு வந்தபோது நான் எதைப் பத்தியும் யோசிக்கலை. அது ரொம்ப சிம்பிள் டெசிஷன். எப்போதுமே அப்பா அதிகமா அட்வைஸ் பண்ணமாட்டார். நடிப்பு விஷயத்துலயும் அப்படித்தான். 'ஹார்ட் வொர்க் பண்ணு... உன்னால முடியும்'னு சொன்னாங்க அம்மா. அவ்வளவுதான்.''


ஸ்ருதி  ஹாசனின் கவர்ச்சியை ரசிப்பவர்களே, இன்னொரு பக்கம் ‘கமல்ஹாசனின் மகள் இவ்வளவு கிளாமரா நடிக்கலாமா?’ என்று விமர்சனமும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட விமர்சனங்களை  எப்படிப் பார்க்கறீங்க?

''எங்கப்பா என்னை இன்டிபென்டென்ட் அண்ட் ஸ்ட்ராங் உமனா வளர்த்திருக்கார். நான் யாருங்கிறதுல எனக்குப் பெருமை உண்டு.''  
மிக கடினமான அந்தக் கேள்வியை ஜஸ்ட் லைக் தட் என கடந்து போகிறார ஸ்ருதி.

அவர்கிட்ட திட்டு வாங்கியிருக்கீங்களா?

''நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. நான் அவருடைய பொண்ணுங்கிறதால திட்டாமவிட்டுட்டதா நினைக்காதீங்க. அவருக்கு சினிமாதான் எல்லாம். கூட நடிக்கிறது மகளோ, வேறு யாரோ நடிகையோ... அவருக்கு சினிமா மட்டுத்தான் கண்ணுக்குத் தெரியும்.''

கமல்ஹாசனுடைய  மகளா உங்களுக்கு அதிகபட்ச பெருமையைக் கொடுத்த ஒரு தருணம்.... அதிக வேதனையைத் தந்த ஒரு தருணம்?

“அப்பாவோட பெயரால் எனக்குக் கிடைச்சிருக்கிற ஆசிர்வாதமும் மக்களோட மனசுல கிடைச்ச இடமும் ரொம்பப் பெரிய விஷயங்கள். அப்பாவோட ஆளுமை, அவரோட திறமை, அவரோட வேலைனு எல்லாமே எனக்குப் பெருமையைக் கொடுக்கிற விஷயங்கள்தான். இவை எல்லாத்தையும் தாண்டி அவர் எனக்கும் அக்ஷராவுக்கும் ரொம்ப நல்ல அப்பாவா இருந்திருக்கார். வெளிப்படையான மனசு, பாசம்னு எல்லாம் கலந்த அற்புதமான அப்பா அவர் என்பதில் எனக்குக் கர்வமும் உண்டு. வேதனைனு சொல்றதுக்கு எதுவும் இருந்ததில்லை. எல்லார் வாழ்க்கையிலயும் கஷ்டமான நேரம் வரும். ஆனா எனக்குத் தெரிஞ்சு அவை எல்லாத்தையும் இவ்வளவு தைரியமா தாண்டிக் கடந்து வந்தவர்னா என் அப்பா மட்டும்தான்.''

ஸ்ருதி

அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் கமல். அப்போதெல்லாம் ஒரு மகளாக உங்களின் மனநிலை எப்படியிருக்கும்?

“அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும். அடுத்தவங்க தேவையில்லாம கிளப்பி விடற சர்ச்சைகளுக்கெல்லாம் அவரே கவலைப்பட மாட்டார். எல்லாத்துலேருந்தும் மீண்டு எழுந்து வந்துடற தைரியம் அவருக்கு உண்டு. ஒரு மகளா அந்த தைரியத்தை ரசிப்பேனே தவிர கவலைப்பட மாட்டேன்.''

கமல், உங்கள் தங்கை அக்ஷரா, நீங்க.... மூணு பேரும் சேர்ந்திருக்கிற தருணங்கள் எப்படியிருக்கும்?

''எல்லாரும் பயங்கர பிஸி. ஃபேமிலியா சேரும்போது நல்ல அனுபவமா இருக்கும். மூணு பேரும் அடிக்கடி சந்திச்சுக்க சந்தர்ப்பங்கள் அமையாது. நானும் அக்ஷராவும் மீட் பண்ணுவோம். இல்லைனா அப்பாவும் நானும் மீட் பண்ணுவோம். மீட்டிங்தான் முக்கியம். எப்பவாவது மூணு பேரும் மீட் பண்ற சான்ஸ் கிடைக்கும். அது ரொம்பவே ஸ்பெஷல்.''


அக்ஷரா ஒரு பக்கம் நடிகை. இன்னொரு பக்கம், இயக்குநராகும் எண்ணத்தில் ஏடியாகவும் வேலை பார்க்கிறாங்க... ஓர் அக்காவா அக்ஷராவைப் பத்தின உங்க விருப்பங்கள் என்ன?

''எனக்கு அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவங்க ஹார்ட்வொர்க் பண்றாங்க. எல்லைகளைத் தாண்டி இன்னும் நிறைய உயரம் தொடணும்ங்கிறது மட்டும்தான் ஆசை.''

சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்கீங்க. ஆனால், சமூகம், மொழி, இனம் சார்ந்த விஷயங்களுக்கு எல்லாம் குரல் கொடுப்பதில்லையே. சோஷியல் மீடியா  வேறு எதற்கான கருவி?

''எல்லா விஷயங்களுக்கும் குரல் கொடுக்கிறதில்லைதான்.  நான் சொல்றதால அந்த விஷயம் நிறைய பேரைப் போய்ச் சேரும்னு நினைக்கிற விஷயங்களைப் பத்திப் பேசிட்டுதான் இருக்கேன். இப்போ இந்தப் பேட்டியில உங்க பாயின்ட் ஆஃப் வியூவுல சில கேள்விகளைக் கேட்பீங்க. அதைத் தாண்டி எனக்கு என் ரசிகர்களுக்குச் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அதை நான் ரீட்வீட் பண்ணுவேன். என் ரசிகர்கள்கூட நேரடியா தொடர்புல இருக்க சோஷியல் மீடியா ஹெல்ப் பண்ணுது.”

ஸ்ருதிஹாசன் பற்றி ஏன் இவ்வளவு கிசுகிசுக்கள்?

“அதையெல்லாம் நான் சீரியஸாவே எடுத்துக்க மாட்டேன். எனக்கு எந்த வகையிலேயும் உதவாத அந்த விஷயங்களைப் பத்தி நான் கேர் பண்றதில்லை.”

செலிப்ரிட்டி வாழ்க்கையில எதையாவது மிஸ் பண்றீங்களா?

“அப்படியெதுவுமே இல்லை. ஷூட்டிங் இல்லாத டைம்ல நானே கடைக்குப் போய் காய்கறி வாங்குவேன். மளிகைச் சாமான் வாங்குவேன். மேக்கப் இல்லாம என்னை பலருக்கும் அடையாளம் தெரியாது. அதையும் மீறிக் கண்டுபிடிச்சிட்டாங்கன்னா பக்கத்துல வந்து சிரிப்பாங்க.... பேசுவாங்க. ஃபோட்டோ கேட்பாங்க. மனசிருந்தா கொடுப்பேன். பிசியா இருந்தா வேண்டாம்னு சொல்லிடுவேன். அது நல்லதுனு நினைக்கிறேன். என் வாழ்க்கை அவ்வளவு ஒண்ணும் அசாதாரணமாகவெல்லாம் இல்லை.”

சமீபகாலமாக எக்கச்சக்கமான விளம்பரப்படங்களில் ஸ்ருதியின் முகம் தெரிகிறதே?

“எனக்குப் பிடிச்ச விளம்பரங்களில் நடிக்கிறேன். ஃபேர்னெஸ் புராடெக்ட்ஸை என்டார்ஸ் பண்ண மாட்டேன். நான் என்டார்ஸ் பண்ற பொருள்கள் நான் யூஸ் பண்றதாகவும் எனக்குப் பிடிச்சதாகவும் இருக்கணும். அது மட்டும்தான் கண்டிஷன்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close