Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்தோஷ் நாராயணன் vs சந்தோஷ் நாராயணன் - இறைவி இசை விமர்சனம்

பாடல்: ஒண்ணு ரெண்டு
குரல்: எஸ்.ஜே.சூர்யா
வரிகள்: விவேக்

விவேக் விரல்களில் ’பொயட்டு’ தனுஷ் புகுந்து எழுதியதைப் போன்ற வரிகள். பாடியவர் - எஸ்.ஜே.சூர்யா இரண்டாவது இடையிசையில் வரும் இசைக்கோர்வை ரசிக்க வைக்கிறது. இரண்டு சரணங்களிலும் வரும் ‘பழுத்த மனசு’ வரிகளுக்கு ஒரே மாதிரி அல்லாமல் வேறு வேறு இசையைக் கொடுத்திருக்கும் விதத்தில் சந்தோஷ் நாராயணன், தான் ஸ்பெஷல் என்று கெத்து காட்டியிருக்கிறார். விடிய விடிய குடித்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் அந்தக் கடைசி கீபோர்ட் பிட் ஆவ்ஸம்! பாடகர்களுக்குண்டான சங்கதிகளுக்கு திணறும் எஸ்.ஜே. சூர்யாவின் குரலை, மெட்டு காப்பாற்றி விடுகிறது.

பாடல்: காதல் கப்பல்
குரல்கள்: சந்தோஷ் நாராயணன்
வரிகள்: முத்தமிழ்

பாடலின் ஆரம்ப பீட்டிலேயே நம் தோள்கள் குலுங்க ஆரம்பித்து, ஒன்ற வைத்துவிடுகிறார். பாடல் முழுவதும் தொடர்ந்து வரும் அந்த பீட்ஸ், இசை விருந்து. ஹை பிட்ச்களில் ஏறி, சடாரென்று இறங்கி பாடகராகவும் மேஜிக் செய்திருக்கிறார்  சந்தோஷ் நாராயணன். கேட்டவுடன் பிடிக்கிற ரகம்!

  


பாடல்: சொல்லத் துடிக்குது மனசு
குரல்கள்: ஆர்.கே.சுந்தர்
வரிகள்: முத்தமிழ்

ப்ரேமம் ப்ரேமாதி டைப்பில் கோரஸில் தொடங்குகிறது. சினிமா தலைப்புகளைக் கோர்த்து எழுதப்பட்டிருக்கும் பாடல். ஆர்.கே. சுந்தரின் குரலில் எஸ்.பி.பி.சரண் சாயல். ஒலித்துக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று எங்கெங்கோ போய் குத்தாட்டத்தில் முடிகிறது. படத்தில், திருமணத்தின்போது, ஒரு ஓரத்தில் ஆர்கெஸ்ட்ராக்காரர்கள் பாடும் பாடலாக இருக்க வேண்டும். ரொம்ப ஸ்பெஷலாக ஒன்றுமில்லாமல், ஆர்கெஸ்ட்ராகாரர்களின் டைப்பில் சந்தோஷ் இசையமைத்திருப்பதிலிருந்தே தெரிகிறது.

பாடல்: துஷ்டா
குரல்கள்: மீனாட்சி, தீ
வரிகள்: விவேக்

காவி நான் மிருக ஆவி நீ இறைவி தேவி நான் கொடிய பாவி நீ என்று மிரட்டுகிற பாடல். புதுப்பேட்டையின் ‘நெருப்பி வாயினில்’ பாடலின் தூரத்து சொந்தக்காரப் பாடல். இசையை விட, குரல்களுக்கும் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சந்தோஷ். இடையிசையிலும் கவர்கிறார்.  


 

பாடல்: ஒத்தையில
குரல்கள்: அந்தோணி தாசன்
வரிகள்: மணி அமுதவன்

இசையெதுவும் இல்லாமல், டேபிளில் தட்டும் இசை கூடவே வர, அந்தோணி தாசன் பாடிய பாடல். ’ஒத்தையில நிக்கறேண்டி’ என்று ஏக்கத்துடனே அவர் பாட, என்னமோ செய்கிறது.

 

பாடல்: மனிதி
குரல்கள்: பிருந்தா, அனந்து & சந்தோஷ் நாராயணன்
வரிகள்: விவேக்

இனி ஒவ்வொரு மார்ச் 8-ம் பெண்கள் தினத்துக்கு ஒலிக்கப்போகும் பாடலாக இது இருக்கக்கூடும். மனிதனுக்கு பெண்பாலாக மனிதியைக் கொடுத்திருக்கிறார் கவிஞர் விவேக். ’கூண்டைக் கொத்திப் பார் அது திறக்கும். சிறகை நீட்டிப் பார்.. சீட்டெடுக்காதே எவனுக்கும்’ என்று பெண்ணுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். பெண்கள் சார்பாக, சந்தோஷ் நாராயணனுக்கு ஸ்பெஷல் சல்யூட்!

தன் துறையிலேயே இருக்கும், இன்னொருவரை விட சிறப்பான படைப்பைக் கொடுக்க வேண்டுமென்ற சவால், ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கலாம்.  ஒரு சிலருக்கு அப்படி இல்லை. அவர்களுக்குப் போட்டி அவர்களே.  சந்தோஷ் நாராயணன், தன் முந்தைய படங்களை விட சிறப்பான பாடல்களைக் கொடுத்து, எனக்கு நானே போட்டி என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார். வெல்டன் சந்தோஷ்!

அட..!! இதப்படிச்சீங்களா?

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close