Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள..’ பாட்டை வாசிச்சேன்... யூடியூப் ரீச் அள்ளினேன்!” - வீணை வீணா ஶ்ரீ

ளைப்புடன் இருக்கும்போதும், கவலையில் இருக்கும்போதும் நம்மை அரவணைப்பது சங்கீதம். அத்தகைய சங்கீதத்தை தன் வீணையின் மூலம் தனது ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தளித்துவருகிறார், வீணா ஶ்ரீ வாணி. அவருடன் ஒரு மெல்லிசைப் பேட்டி... 

“உங்கள் இசைப் பயணம் ஆரம்பித்தது எப்படி?”

என் சொந்த ஊர் ஹைதராபாத். கணவர் பிசினஸ் பண்றார். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா. என் ஏழு வயசிலேயே பாட்டும் வீணையும் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்படித்தான் என் இசைப் பயணம் ஆரம்பிச்சது.” 

“எப்போது ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்ய ஆரம்பிச்சீங்க?”

என் திருமணத்துக்குப் பிறகு எப்போதாவதுதான் வீணை வாசிச்சுட்டிருந்தேன். என் ஃப்ரெண்டுதான் ‘நீ நல்லா வாசிக்கிறே. ஃபேஸ்புக் பேஜ் கிரியேட் பண்ணி அப்லோடு பண்ணலாமே’னு சொன்னாள். நானும் முயற்சிப் பண்ணி பார்க்கலாம்னு, ஒரு தெலுங்குப் பாட்டுக்கு வீணை வாசித்து அப்லோடு பண்ணினேன். மூணாவது பாட்டா 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே' என்கிற ' தளபதி' படத்தின் பாடலை வாசித்தேன். அது பயங்கரமா ரீச் ஆச்சு. தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்.” 

வீணா

“சினிமாப் பாடல்களை எப்போது தேர்ந்தெடுக்க ஆரம்பிச்சீங்க?”

பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் நண்பர்களுக்காக, அவங்களுக்குப் பிடிச்ச தெலுங்குப் பாடல்களை வாசிச்சு காட்டுவேன். அப்போதான், என்னால் வீணையில் சினிமா பாட்டும் வாசிக்க முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன்.” 

“எந்தெந்த மொழிப் பாடல்களை வாசிக்கிறீங்க?''

“தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் மொழிப் பாடல்களை வாசிச்சுருக்கேன். இந்த மொழிதான் தெரியும், இதில் மட்டும்தான் வாசிப்பேனு இல்லாமல், எந்த மொழியா இருந்தாலும் வாசிப்பேன்.” 

“தமிழ்த் தெரியாமல் தமிழ்ப் பாடல்களை எப்படி வாசிக்கிறீங்க?”

இசைக்கு மொழி ஏது? தெரியாத மொழியா இருந்தாலும், அந்தப் பாட்டின் மெட்டை நிறைய தடவை கேட்டு உள்வாங்கிப்பேன். அதுக்கப்புறம் அதை வாசிப்பேன். 'ஹம்மா ஹம்மா' பாடலெல்லாம் செம ரீச்!” 

வீணா

 

“வீணையில் உலகச் சாதனை செய்திருக்கீங்களாமே...”

ஆமாம்! சின்ன வீணையில் பாடல்களை வாசித்து ரெக்கார்டு கிரியேட் பண்ணிருக்கேன். சின்ன வீணையில் நாம நினைக்கும் பாட்டை முழுசா கொண்டுவருவது சவாலான விஷயம். அதில் இந்த மாதம் உலகச் சாதனை பண்ணினது ரொம்பவே மகிழ்ச்சி!”

“மறக்க முடியாத அனுபவம்...”

நான் முதலில் தெலுங்குப் பாடல்களைத்தான் வாசிச்சு, ஃபேஸ்புக்ல அப்லோடு பண்ணிட்டிருந்தேன். அப்போ, என் கேரள ரசிகர் அவருக்காக 'பிரேமம்' படப் பாடல்களை வாசிக்கச் சொன்னார். அதுக்காக, பிராக்டீஸ் பண்ணி அந்த வீடியோவைப் பதிவு பண்ணினேன். நிறைய லைக்ஸ் குவிஞ்சது. அது எப்பவுமே மறக்க முடியாது.” 

“ரசிகர்கள் கேட்கும் பாடல்களை வாசிப்பீங்களா?”

ஆமாம்! என் ஃபேஸ்புக் பேஜ்ல 'நேயர் விருப்பம்' நிச்சயம் உண்டு. எந்த மொழிப் பாடல்களாக இருந்தாலும், என் ரசிகர்களுக்காக கத்துகிட்டு வாசிப்பேன். மெலடி, குத்துப் பாட்டுனு எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் விருப்பமே என் விருப்பம். அதான், ஃபேஜ்புக்ல என்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொட்டிருக்கு.”

வீணா ஶ்ரீ வாணி

“சினிமாவுக்கு வொர்க் பண்றீங்களா?”

ஓ... 'பாகுபலி' படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி சாருக்கும், இசை அமைப்பாளர் தமனுக்கும் வீணை வாசிக்கிறேன்.” 

“ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு?”

எங்க வீட்டில் எபப்வும் முழு ஒத்துழைப்பு உண்டு. சில சமயம் வாசிக்கும்போது, இடையிலேயே அந்த மெட்டைப் பிடிக்க முடியலைனு சோர்ந்துடும்போதெலலம் உன்னால் முடியும்னு என் கணவர் உற்சாகப்படுத்துவார்.” 

“எதிர்காலத் திட்டம் என்ன?”

பிரம்மாண்ட மேடையில் லைவ்வா எனது ரசிகர்களுக்குப் பிடித்தமான பாடல்களை வீணையில் வாசிக்கணும். அதற்கான முயற்சியை செஞ்சுட்டிருக்கேன்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close