Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய சினிமாவை விரும்பும் 'நடிப்பு ராட்சசன்' சோய் மின் சிக்!

 

சோய் மின் சிக்... இந்தப் பெயர் தென் கொரியாவில் அதிகம் பாப்புலர். கொரியன் சினிமாக்களைத் தேடிப் பிடித்துப் பார்ப்பவர்களுக்கு இவர் முகம் நன்குப் பரிச்சயமாகி இருக்கும். அந்த அளவு நடிப்பு ராட்சசன். பார்ப்பதற்கு அச்சு அசல் ஜாக்கி சான் போலவே இருக்கும் சோய் மின் சிக்குக்கு இப்போது 52 வயது. கடந்த 1989லிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அதிகம் சைக்கோத்தனமான கேரக்டரில் நடித்து வருவதால் இவரைப் பார்த்தால் நடுங்கும் கொரியர்களும் உண்டு. அந்த அளவுக்கு அந்த கேரக்டராவே மாறிவிடும் வல்லமை கொண்டவர் சோய் மின் சிக்.

உலகின் சர்ச்சையைக் கிளப்பும் ‘கல்ட்’ வகை க்ளாசிக் சினிமாக்களை பட்டியல் இட்டால் அதில் தவறாமல் இடம் பிடித்துவிடும் இவர் நடிப்பில் 2003ல் வெளியான ‘ஓல்டு பாய்’ என்ற படம். பழிவாங்குவதில் இருக்கும் உச்சபட்ச வெறித்தனம் ‘ஓல்டு பாய்’ படத்தின் காட்சிகள்தான் என உலக சினிமா விமர்சகர்கள் வர்ணிக்கிறார்கள். ஹேப்பி எண்ட், ஸ்ப்ரிங் டைம், க்ரையிங் ஃபிஸ்ட், ஸிம்பதி ஃபார் லேடி வென்ஜியன்ஸ், நேம்லெஸ் கேங்ஸ்டர் போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த ரெடர் படங்கள்.

ஏகப்பட்ட டிவி தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் ஆரம்ப காலங்களில் நடித்துள்ளதால் இப்போதும் டிவியோ, தியேட்டரோ ஈகோ பார்க்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து விட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘ஐ ஸா தி டெவில்’ படம் கண்டிப்பாக ஆக்ஷன் விரும்பிகள் விரும்பிப் பார்க்க வேண்டிய உலக சினிமா! வில்லன் பாத்திரத்தில் ஹீரோவைக் க்ளைமாக்ஸ் வரை கதறி அழவிடும் கொடூர சைக்கோ கொலைகாரனாக மிரட்டி எடுத்திருப்பார்.

இப்போதுவரை அந்த நடிப்பை ஓவர் டேக் பண்ண ஆள் இல்லை என்கிறார்கள். ‘அல்ட்ரா வயலன்ட் வில்லன் ஆஃப் தி மில்லினியம்’ என இணைய விமர்சகர்களால் ஏகத்துக்கும் கொண்டாடப்படுகிறார் சோய். வாய்ப்பிருப்பின் அந்தப் படத்தை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தப்படமும் ‘ஓல்டு பாய்’ படமும்தான் இப்போது அதிகம் அந்நிய நாடுகளில் விற்பனையாகும் கொரியப் படங்களாக சாதனை படைத்துள்ளது. (அதாவது நம் இந்தியாவில் என்றும் சொல்லலாம்!)

கடந்த வருடம் ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீ இயக்கத்தில் ஜோஷ் ப்ரோலீன் நடிப்பில் ஓல்டு பாய் படம் ரீ-மேக் செய்யப்பட்டது. ஆனாலும், ஒரிஜினலின் பக்கத்தில்கூட இந்தப்படம் வரமுடியவில்லை. இத்தனைக்கும் படத்தில் சாமுவேல் ஜாக்ஸன் போன்ற ஜீனியஸ் நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

சமீபத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் நடிப்பில் வெளியான ‘லூஸி’ என்ற ஆக்ஷன் படத்தில் முக்கிய வில்லனாய் நடித்து ஹாலிவுட்டிலும் ஹிட் எண்ணிக்கையை அண்மையில் ஆரம்பித்துள்ளார் சோய்.

இத்தனை சிறப்பு வாய்ந்த சோய் இளம் வயதில் காசநோயால் பீடிக்கப்பட்டு மரணம் வரை சென்று மீண்டவர். வறுமையில் வாடியவர். நாடகக் கலையை விளையாட்டாக கற்றுக் கொன்டவர். இன்று கண்டங்கள் தாண்டியும் தன் நடிப்புக் கலையால் கொண்டாடப்படுகிறார். ‘வில்லத்தனமான பாத்திரங்கள் மட்டுமல்ல மனதை வருடும் ஹிமாலயா வேர் தி விண்ட் ட்வெல்ஸ்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் எல்லோருக்கும் ஓல்டு பாயும், ஐ ஸா தி டெவிலும் தான் கண்ணுக்குத் தெரிகிறது.

அதெல்லாம் இருக்கட்டும் இப்போது எத்ற்கு சோய் மின் சிக் புராணம் எனக் கேட்கிறீர்களா? அவரைப் பற்றி யாரும் அறியாத தகவல் ஒன்று இதோ... அவருக்கு இந்திய சினிமாக்கள் அதிகம் பிடிக்குமாம்! இதைத் தெரிந்து கொண்ட சில முக்கிய பாலிவுட் பிரபலங்கள் இப்போது அவருக்கு வலைவிரிக்க ஆரம்பித்துள்ளன.

சோய் மின் சிக் அநேகமாக பாலிவுட்டில் ஏதாவது ஒரு கானுக்கு மிரட்டல் வில்லனாக சீக்கிரமே நடிப்பார்!

-ஆர்.சரண்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close