Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் , சூர்யாவுடன் அமர்ந்திருப்பதில் பெருமை - தனுஷ் !

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, இசை, இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘இசை’ . இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய், தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழாவில் தனுஷ் பேசியபோது : "நான் ப்ளஸ் ஒன் படித்த போது 'குஷி' படத்தை ரோகிணி தியேட்டரில் பார்த்தேன். இப்போது விஜய் சார், சூர்யா சார் உடன் நான் அமர்ந்திருப்பதில் பெருமையாக இருக்கிறது.



சூர்யா சார் பேசுவதே பாடுவது மாதிரி இருக்கும். அவர் இசையமைப்பதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அவரது படங்களில் அவரது இசைஞானம் தெரியும். அவர் படப்பாடல்களைக் கேட்டால் இசையைக் கேட்டு வாங்கியது தெரியும்

இன்றைக்கு ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் ஜெயிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார். '' என்று தனுஷ் பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close