Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஐ ' தெலுங்கு , இந்தி இசை வெளியீட்டு விழா!

ஷங்கர் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும்  படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் நடித்திருக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ‘ஐ’படத்தின் இந்தி மற்றும் , தெலுங்கு இசை வெளியீடு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தி இசை வெளியீடு வரும் டிசம்பர் 5ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது. அதே போல்,  தெலுங்கு இசை வெளியீடு டிசம்பர் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.

 ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொண்டது போல் , இந்தி, தெலுங்கு இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள, சில்வஸ்டர் ஸ்டோலன் மற்றும் ஜாக்கிசான் இருவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.  எனினும் இதுகுறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்ப எதுவும் வெளிவரவில்லை. 

தமிழ் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி கலந்து கொண்டது போல் இந்தி மற்றும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close