Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டைரக்டர் சார் இன்னொரு சான்ஸ் ப்ளீஸ் - சிவகார்த்திகேயன்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா நடித்துவரும் படம் ‘காக்கி சட்டை’. சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. 

'காக்கி சட்டை' படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துவங்க உள்ளன. இது குறித்த தகவலை துரை செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

'' வெற்றிகரமாக ’காக்கி சட்டை’ படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நிறைவடைந்தது. நன்றி சுகுமார் மற்றும் கோபிநாத் '' என ட்வீட் செய்துள்ளார். 

இதற்குப் பதில் ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன் . '' சூப்பர் கூல் டீம், உங்கள் ஆதரவிற்கு நன்றி சுகுமார் சார், மிஸ் யூ செந்தில் அண்ணா , டைரக்டர் சார் இன்னொரு சான்ஸ் ப்ளீஸ் '' என ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள துரை, 'நாங்களும் மிஸ் பண்ணுகிறோம்' என கூற, அதற்கு சிவகார்த்திகேயன் 'அந்த கடைசி லைனுக்கு பதில் வரலையே' என கண்ணடிக்கும் ஸ்மைலியுடன் கேள்வி கேட்டுள்ளார். 

’வித் ப்ளஷர் சார் ’என பதில் ட்வீட் செய்துள்ளார் துரை செந்தில்குமார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close