Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்காவின் அர்த்தமுள்ள ஆசை!

’லிங்கா’ படத்தின் வெற்றி அனுஷ்காவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தெலுங்கில் ‘பாகுபாலி’, ‘ருத்ரமாதேவி’, தமிழில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ என 2015ம் ஆண்டும் தனக்கான ஆண்டாக இருக்கும் என்பதால் அனுஷ்கா உற்சாகத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் 'லிங்கா' புரமோஷனில் கலந்துகொண்ட அனுஷ்கா சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். 

'' சீஸனில் கிடைக்கும் பழங்கள் மாதிரிதான் நடிகைகள். ஒரு சீஸனில் ஒரு நடிகை என்றால், இன்னொரு சீஸனில் மற்றொரு நடிகை. 

என்னைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்கிறேன். முதல் இடம் குறித்த ஆசையெல்லாம் இல்லை. சாவித்ரி, வாணிஸ்ரீ, ஜெயசுதா, ஜெயப்பிரதா போன்ற பழைய நடிகைகளை இன்றைக்கு உள்ள சிறுவயது பசங்ககூட அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

 அவர்கள் காலத்தில் இப்போதுபோல் தகவல் தொழில்நுட்பங்கள் கிடையாது. ஆனாலும், இன்றும் அவர்கள் கேரக்டர்கள் பேசப்படுகின்றன. ஆனால், என்னையோ இப்போதைய மற்ற நடிகைகளையோ  ரசிகர்களுக்கு அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை.

டிவி, இணையதளம், முகநூல் என இருந்தும் கூட அவர்கள்போல் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. சாவித்திரி, வாணிஸ்ரீ போல் நல்ல கேரக்டர்களில் நடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்பது என் ஆசை''  என கூறியுள்ளார் அனுஷ்கா . 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close