Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநராகும் சிவா!

’சென்னை 600028’ படம் மூலம் நடிகராக அறிமுகமான சிவா ’தில்லு முல்லு’ ‘கலகலப்பு’, மற்றும் ‘யா யா’, ’வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாபி சிம்ஹா , கருணாகரன் நடிப்பில் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படம் மூலம் வசனகர்த்தாவாக அடுத்த கட்டத்துக்கு சென்றார். 

இப்போது புது படமொன்றை இயக்க உள்ளார். 'காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு’ என அப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது தவிர்த்து மூன்று கதைகளை உருவாக்கி உள்ளாராம். இந்த ‘காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு’ படத்தில் தானே நடிக்கவும் இருக்கிறார். 

இந்த படத்தில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு தான் ஒப்பந்தமாகியுள்ள ‘144’ படத்தை முடித்துவிட்டு , தன் சொந்த படத்தை இயக்க உள்ளார். காமெடி காதல் படமாக உருவாகி வருகிறது ‘144’. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close