Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரும்பாடு பட்டு எனது ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் - ஜி.வி.பிரகாஷ்!

ஐ’, படத்தையடுத்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சங்களுடன் , வசூலிலும் சூடு பிடித்துள்ளது ஜி.வி.பிராகாஷ், ஸ்ருஷ்டி ,நிக்கி கல்ராணி, கருணாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டார்லிங்’. ரிலீஸ் ஆன அனைத்து திரையரங்குகளிலும் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார், கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள ஜி.வி. மேலும் தனக்களித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 அவர் கூறியுள்ளதாவது, எனக்கு தங்கள் ஆதரவை , அன்பை அளித்து வரும் ஊடக மற்றும் ரசிகர் நண்பர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் போதாது. நான் நடித்துள்ள டார்லிங்படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவு என்னை நெகிழ செய்கிறது.

 

பெரும் ஆனந்தத்திற்கு அப்பாற்பட்டு, நல்ல படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற பொறுப்பையும் தந்துள்ளது. அரும்பாடு பட்டு எனது ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். அனைவருக்கும் இதயம்கனிந்த எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்என கூறியுள்ளார்  ஜி.வி.பிரகாஷ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close