Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாகரன், நந்திதா ஜோடியாக நடிக்கும் ‘உப்பு கருவாடு’ !

இயக்குநர் ராதா மோகன் , உணர்வுகள் ரீதியாகவும், வித்தியாசமான கதை களம் மூலமாகவும், படங்களுக்கு வைக்கப்படும் வித்யாசமான தலைப்புகள் மூலமாகவும் அவருக்கென்று ஒரு பிரத்தியேக ரசிகர் வட்டாரத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளார். தற்போது தனது புதிய படத்திற்கு ‘உப்பு கருவாடு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.இந்த படத்தில் கருணாகரன் ஹீரோவாகவும், நந்திதா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குநர் ராதா மோகன் கூறும்போது, “ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சிய பயணத்தை தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள்  நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை பற்றிய கதை தான் இப்படம். லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சிய பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும், என்பதை நகைச்சுவை கலந்துக் சொல்லியிருக்கிறேன்.



நகைச்சுவைப் படங்கள்  எனக்கு எப்பொழுதுமே ஒரு தீரா மோகம் உண்டு. என்னுடைய முந்தைய படங்களில் கூட நகைசுவை பிரதானமாக தெரியும் 'உப்பு கருவாடு' படத்தில் எனக்கு அதற்கேற்ப சரியான கதை களம் அமைந்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் கடல் சார்ந்த பகுதிகளில் முழுவதுமாக படமாக்கப்படும் ‘உப்பு கருவாடு’ அந்த மனிதர்களின் வாழ்கை முறையை  சித்தரிக்கும் படமாகும்.” என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் கூறுகையில் “ராத மோகனிடம் இந்த கதையை நான் எதேச்சையாக  கேட்க நேரிட்டது. கேட்ட மாத்திரத்திலே இந்த படத்தை தயாரிக்க வேண்டும்  என உந்துதல் ஏற்பட்டது.  அந்த உந்துதலே ’உப்பு கருவாடு’ உருவாக காரணம், இடைவிடாமல் சிரிக்க வைக்கும் வல்லமை படைத்த கதை 'உப்பு கருவாடு'. இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close