Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எவ்வளவு நாளைக்குத்தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது ?

அஜீத்தை சால்ட்&பெப்பர் கெட்டப்பில் பார்த்துவிட்டோம் ஒரு சேஞ்ச்க்கு அவர் சிறு வயதில் எப்படியெல்லாம் இருந்திருப்பார் என்று கற்பனைச் செய்து பார்ப்போம். 

பள்ளி எந்த விழா நடத்தினாலும் அஜீத் போக மாட்டார்.மீறி யாராவது வற்புறுத்தி அழைத்தால் "நான் ஸ்டூடன்ட் என்னை நிம்மதியா படிக்கவிடுங்க, இன்னொரு தடவை இப்படி பண்ணா படிப்பை இப்பவே நிறுத்திடுவேன்னு அட்டகாசம் பண்ணியிருப்பார். தனக்கென கொடுத்த ரேங்கை கூட வேண்டாம் என நிராகரித்திருப்பார்.

இவர் கையாலேயே  நூடுல்ஸ் சமைத்து பள்ளிக்கு எடுத்துவந்து நண்பர்ளுக்கு பரிமாறியிருப்பார்.
வெள்ளிகிழமைகளில் பள்ளிக்கு லீவ் போட்டுவிட்டு கோயில்ளுக்கு தலப்புராணம் கேட்க சென்றிருப்பார்.
பள்ளியில் ஃபேஷன் ட்ரெஸ் போட்டிக்குகூட ஒரிஜினல் கெட்டப்பில்தான் வருவேன்னு தலைக்கு, மேக்கப் போட்டுக்க மாட்டேன், கலர் அடிக்க மாட்டேன் என அடம்பிடித்திருப்பார்.

இப்ப பேசினது யாருனு சொல்லலைனா எல்லாரும் பென்ச் மேலே நிக்கவெச்சிடுவேன்னு டீச்சர் மிரட்டினால் தன் நண்பர்களையே காட்டிகொடுத்துவிட்டு  "எவ்ளோ நாளைக்குதான் நானும் நல்லவனாவே நடிக்கிறது"என்று பஞ்ச் அடித்துருப்பார்.

ஸ்லோ வாக்கிங்,ஸ்பீடு வாக்கிங் போட்டிளில் முதல் பரிசு பெற்றிருப்பார். தீபாவளி,பொங்கலுக்கு எடுத்த சூப்பர்மேன் டிரஸ்ஸோ,ஸ்பைடர் மேன் டிரஸ்ஸோ மற்றவர்கள் பள்ளிக்கு அணிந்து வந்தால் இவர் கோட் சூட்டுடன் ரைமன்ட் க்ளாஸ் அணிந்து வலம் வந்திருப்பார்.


அப்பாவைக் கடைக்கு அழைத்துப்போய் "அது" "அது" "அது" என்று பயங்கரமாக குழப்பியிருப்பார்.
யாராவது பென்சில் எடுத்துட்டு வரலைனா அவர்களுக்கு ஒரு பென்சில் தந்துவிட்டு இதை யாருக்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிருப்பார். தலைக்கு பப்ளிசிட்டி பிடிக்காது. பள்ளி நாடகங்ளில் வில்லனாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்திருப்பார். சாப்பிடும் போது கூட ஒரே பிராண்டான உணவுகளைத்தான் சாப்பிடுவார். நண்பர்களுக்கு பிரச்னை என்றால் உடனே இவர்தான் முதல் ஆளாக நிற்பார் ஆனாலும் தனது பெயரை வெளியிடுவதை விரும்ப மாட்டார். 


                                                                                                                         -குரு அஸ்வின்-

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close