Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை ரைனோஸ் ஹாட்ரிக் வெற்றி - ஆட்டநாயகனாக விக்ராந்த்!

மும்பை ஹீரோஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை ரைனோஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறி ஹாட்ரிக் வெற்றியை தக்க வைத்துள்ளது. 

5வது நட்சத்திர கிரிக்கெட் லீக் போட்டிகள் நேற்று அஹமதாபாத்தில் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்தது. நேற்றைய ஆட்டமாக சென்னை ரைனோஸ் அணி , மும்பை ஹீரோஸுடன் மோதியது. டாசில் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்து ஆடினர். 

ஆட்ட முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்து சென்னை அணிக்கு 158 என இலக்கு நிர்ணயித்தனர். தொடர்ந்து ஆடிய சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை 15.3 ஓவர்களில் முடித்து ஆபார ஆட்டத்தை வெளிபடுத்தினர். 

விக்ராந்த் 63 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டினார். சல்மான் கான் விக்ராந்திற்கு விருதை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். இப்போட்டியைத் தொடர்ந்து சென்னை அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close