Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’!

’பெட்டிக்கடை இன்று விடுமுறை’ என்னும் படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபகாலமாக சமுத்திரக்கனி சவாலான குணச்சித்திர நடிகர் வேடங்களில் நடித்து வருகிறார். ‘சாட்டை’, ‘வேலையில்லா பட்டதாரி’ என இவர் நடித்த படங்களில் சமுத்திரகனியின் பாத்திரங்கள் மக்கள் மத்தியில் சற்றே பிரபலமானது குறிப்பிடத்தக்கது.தற்போது ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’.

அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக்கடையே இருக்கும். அது அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக்கடையை மையப்படுத்தி சுழலும் கதைதான் 'பெட்டிக்கடை இன்றுவிடுமுறை'. 

இப்படத்தில் காதல், கலகலப்பு நகைச்சுவை எல்லாம் இருக்கும்.நெல்லை வட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது.புதுமுக இயக்குநர் இ கார்வண்ணன் இயக்குகிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார்.



''இது இன்றைய இளைஞர்களின் அப்பாக்களின் காதல் கதை என்றும் கூறலாம். அக்கால கட்டத்தின் அசல்தன்மையுடன்  மண்ணின் மணம் மாறாத யதார்த்த பதிவாக இது இருக்கும். படத்தில் வரும் கில்லி விளையாட்டு இரண்டு ஊர்ப்பகை வருமளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.'' என படம் குறித்து பகிர்ந்துள்ளார் இயக்குநர். 

நாயகனாக 'மொசக்குட்டி' வீரா நடிக்க,  நாயகி உள்பட பலரும் புதுமுகங்களே. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.  ஆர்.சுந்தர் ராஜன், செந்தில் ஆகியோரும் நடிக்கிறார்கள். நெல்லைப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் வரும் 19ம் தேதி படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close