Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏன் கூலிப்படை உருவாகிறது - ’K3’ படம் குறித்து இயக்குநர் அண்ணாதுரை!

காமதேனு இண்டர்நேசனல் படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “ k3 “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் விஸ்வாந்த், சுதிர், பாவாலட்சுமணன்,ராஜேந்திரநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.அண்ணாதுரை கூறிய போது. இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா, கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை தான் இந்த படம் அதனால் தான் இந்த படத்திற்கு “ k3 “ என்று பெயர் வைத்துள்ளோம்.

அந்த மூன்று இளைஞர்கள்  கூலிப்படையாக எப்படி மாறுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இன்று நாட்டில் கூலிப்படை வேலை செய்வது  பெரும்பாலும் பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் இருகிறார்கள். அவர்கள் கூலிப்படையாக மாற காரணம் அவர்களது சூழ்நிலைதான். அதைதான் இதில் சொல்கிறோம்.

காதல் மற்றும் திரில்லர் படமாக உருவாகி உள்ளது இந்த படம்.படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா, சென்னை, சேலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்கிவிட்டார் அது எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close