Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’வஜ்ரம்’ 20ம் தேதி வெளியாவதில் சிக்கல்!

'பசங்க', 'கோலிசோடா' படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘வஜ்ரம்’. கதாநாயகியாக பவானிரெட்டி  என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.'

ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா,ஜெய், பாண்டிரவி, பெல்பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி,சமிரா,அம்சாதேவி,  நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள்.கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் S.D.ரமேஷ்செல்வன்

வருகின்ற 20 ஆம் தேதி வெளியாக இருந்த ’வஜ்ரம்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெறுவதால் படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்து நிறைய சீன்களை கத்தரித்துள்ளனர். அதனால் தற்பொழுது சில காட்சிகள் மறு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருகிறது.

எனவே படம் 20 ஆம் தேதி வெளியாவதில் சில குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close