Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம்?

’பீட்ஸா’, ‘ஜிகர்தண்டா’ படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தின் கதையில் மும்முரமாக இருக்கிறார். இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா என மூவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்திற்கு ‘இறைவி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை சி.வி.குமாரின் திருகுமரன் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் எனவும், இசை சந்தோஷ் நாராயணன் எனவும் கூறப்படுகிறது.

படத்திற்கு மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close