Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”பென்சில்” பட இசையை வெளியிடுகிறார் விஜய்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் தயாராகும் “பென்சில்” படத்தின் இசைவெளியீடு மற்றும் டீஸர் வரும் 19ம் தேதி நடைபெறவிருக்கிறது.

“பென்சில்” படத்தின் இசையை டிவிட்டர் பக்கத்தில் விஜய் வெளியிடுகிறார். இதைப் பற்றி ஜி.வி. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ என்னுடைய அண்ணன் விஜய்,  ”பென்சில்” படத்தின் இசை மற்றும் டீஸரை ட்விட்டரில் ரிலீஸ் செய்யவிருக்கிறார். நான் மிகவும் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் 19ம் தேதிக்காக காத்திருக்கிறேன் என்று நெகிழ்ந்துள்ளார்.

விஜய் நடிப்பில் “தலைவா” படத்தில் இசையமைத்தது மட்டுமல்லாமல்,  வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலில் ஒரு காட்சியில் ஆடவும் செய்திருப்பார் ஜி.வி.பிரகாஷ். மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கும் ஜி.வி. தான் இசையமைப்பாளர் என்பது கூடுதல் செய்தி

’பென்சில்’ புதுமுக இயக்குநர் மணி நாகராஜ் இயக்க, ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை கவணிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இவர் நடிக்க ஒப்பந்தமான முதல் படம் ’பென்சில்’ தான். ஆனால் முன்னதாக “டார்லிங்” ரிலீஸாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close