Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதையை கேட்டவுடன் மிரண்டுவிட்டேன் - ’ஒரு மெல்லிய கோடு’ படம் குறித்து இளையராஜா, அர்ஜுன் !

அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.படு திரில்லர், ஆக்ஷன் படமாக “ ஒரு மெல்லிய கோடு “ இருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும் அப்படியொரு காட்சிகள் இருக்கும். மேக்கிங் முதற்கொண்டு அனைத்து விஷயங்களிலும் “ ஒரு மெல்லிய கோடு” பாராட்டப் படும் படமாக இருக்கும் என்கிறார் A.M.R.ரமேஷ் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இந்த படத்தின் துவக்கவிழா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது..

விழாவில் இசைஞானி இளையராஜா பேசியபோது,  ஹாலிவுட் படங்களை விட தமிழில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. நிறைய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். ‘சிவப்பு ரோஜாக்கள்’ படம் தான் நான் இசையமைத்த முதல் திரில்லர் படம். அந்த வகையில் இந்த ’ஒரு மெல்லிய கோடு’ படமும் வெற்றி பெரும் என்று கூறினார்.

விழாவில் அர்ஜுன் பேசியது...

இயக்குனரிடம் இந்த கதையை கேட்டவுடன் மிரண்டுவிட்டேன். அப்படியொரு திரைக்கதை. நான் நடித்த படங்களிலேயே இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

ஒரு மெல்லிய கோடு பட துவக்க விழா ஆல்பத்திற்கு: http://cinema.vikatan.com/articles/news/24/8902

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close