Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’!

’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான காமெடியன் சந்தானம் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கிவிட்டார். ஒரு பக்கம் ‘நண்பேண்டா’, ‘இது நம்ம ஆளு’, ‘’வாலு’, என சந்தனம் காமெடியில் ரிலீஸ்க்கு காத்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் தனது படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகளை முடித்துவிட்டார்.

’இனிமே இப்படிதான்’ என படத்திற்கு தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தை முருகானந்த் இயக்கி வருகிறார். படத்தில் நாயகிகளாக ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகி அகிலா கிஷோர், மற்றும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஹீரோயின் ஆஷ்னா ஸாவேரி என இரு நாயகிகள் நடிக்கின்றனர். 

இவர்கள் தவிர்த்து தம்பி ராமையா, ரோஹினி, கருணாகரன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். படத்தின் பெரும்பாலான பகுதிகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close