Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்யா நடிக்கும் ’சைஸ் ஸீரோ’!

ஆர்யாவுக்கு ’மீகாமன்’ படத்தையடுத்து ’புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.  அதைத் தொடர்ந்து ’யட்சன்’, ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. 

தற்போது இப்படங்களை அடுத்து பி.வி.பி. புரொடக்‌ஷன் தயாரிப்பில் புதிய படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி அனுஷ்கா. ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு மீண்டும் அனுஷ்காவுடன் ஆர்யா இணைந்து நடிக்கும் படம் இது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

தெலுங்கின் பிரபல இயக்குநர் பிரகாஷ் கோவேலமுடி இப்படத்தை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இயக்க உள்ளார். இவர் பிரபல தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரா ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் கனிகா திலோன் எழுதுகிறார். இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இயக்குநர் ராகவேந்திர ராவ் இயக்க, கனிகா திலோன், பிரகாஷ் கொவேலமுடி ஆகியோர் கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளனர். படத்திற்கு தற்போது ‘சைஸ் ஸீரோ’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்த பெயர் தமிழில் இல்லை என்பதால மாறும் வாய்ப்புகள் உள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close