Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனிமே எதுக்கு அது வெறும் ‘தகடு தகடு’ - உத்தம வில்லன் இசை விழா சுவாரஸ்யங்கள்!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, கே.பாலசந்தர், பார்வதி நாயர், ஜெய்ராம், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ உத்தம வில்லன்’. படத்திற்கு இசை ஜிப்ரான். இப்படத்தின் 2வது டிரெய்லர் மற்றும் இசை நேற்று மாலை ரிலீசானது. 

நிகழ்ச்சியை இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவருக்கே உரிய பாணியில் கலகலவென தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கமல், லிங்குசாமி, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி நாயர், கௌதமி, மதன் கார்க்கி, ரமேஷ் அரவிந்த், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர், மேலும் கமலுக்காக கே.பாலசந்தர் பேசிய வீடியோ,மற்றும் கே.பாலசந்தருக்கு கமல் பேசிய வீடியோ, உத்தம வில்லன் மேக்கிங் வீடியோக்கள், இசை வெளியீடு, பூஜா குமார், பூர்ணா நடனம் என பல கண்களுக்கு விருந்தான நிகழ்வுகள் அரங்கேறியன.

வணக்கம் கூறி துவக்கி வைத்த பார்த்திபன் சினிமா மார்வாடி கடையல்ல , கமல் போன்ற ஆட்களால் தான் அதன் ‘மார் வாடிப் போகாமல் இருக்கிறது என கமலின் கலை ஞானம் குறித்து பேசினார். பாலசந்தரின் வீடியோ முடிந்தவுடன் பேசிய கமல், எவ்வளவோ ஒத்திகை பார்த்துவிட்டேன் ஆனாலும் இந்த வீடியோ பார்த்து முடித்தபின் அத்தனையும் வேஸ்ட், எனக்கு பேச்சு வரவில்லை என்பதே உண்மை. என் குருநாதர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே பெருமையான விஷயம் என சற்றே நெகிழ்ந்தவர். அவருக்கு இந்த சீடனின் காணிக்கை என ஒரு வீடியோ ஒளிபரப்பானது.

 

நாசர் தன் மகன் மருத்துவமனையில் இருந்த தருணம் கமல், என்னை அப்படி பார்த்துக் கொண்டார். எனக்காக பிரித்த செட்டை கூட பல லட்சங்களை கொட்டி மீண்டும் அரங்கம் அமைத்து என்னை நடிக்க வைத்தார் என கண் கலங்கினார்.

 

இப்படியே போய் கொண்டிருந்த நிகழ்ச்சியை பார்த்திபன் சோகமாகவே இருக்கிறதே , இதோ பாடல் என்றவுடன் பூர்ணா, பார்வதி கமலின் பிரபல பழைய பாடல்களுக்கு அதிரடி ஆட்டத்தை கொடுத்தனர். தொடர்ந்து ஊர்வசி, பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி நாயர் மேடையேற , பார்த்திபன் அவர்களிடம் பல சிக்கலான கேள்விகளை கேட்டு அரங்கத்தை சிரிப்பில் ஆழ்த்தினார். கமல் உங்களிடம் உதட்டளவில் பேசுவாரா? அல்லது என்றவுடன் ரசிகர்கள் கைதட்டலை கொடுக்க, பார்த்திபன் அட டக்குன்னு ஏம்பா கை தட்றீங்க, என்ன தப்பா நினைக்க மாடார்களா என கேட்விட்டு இல்ல உள்ளத்தளவில் பேசுவாரா என முழுமையாக்கினார்.

இப்படியாக இசை வெளியீட்டு வேளையில் வழக்கம் போல சிடி வடிவ கட் அவுட் வர , அட அது எதுக்கு அது வெறும் ’தகடு தகடு’ என சொன்ன கமல் , இப்போதெல்லாம் சிடி எங்கே வாங்குகிறார்கள், எல்லாம் டவுண்லோட்தானே,  இதோ பெரிய ஸ்க்ரீனில் என்றவுடன் , அப்லோட் பட்டனை கமல் தட்ட லோட் ஆனது. உடனே லிங்குசாமி அதெல்லாம் இருக்கட்டும் இசையை வெளியிட யாரெனும் பெற்றுக்கொள்ள வேண்டுமே என கேட்க கமல் பொருங்கள் அதுதானே அதையும் செய்துவிடுவோம். என தன் மொபைலில் போன் செய்தார். 

மறுமுனையில் ஸ்ருதியின் குரல், ஹாய் அப்பா! என்னமா பண்ற , மும்பை ஷுட்டிங், இப்போ டின்னர் போயிட்டு இருக்கேன் என்றவரிடம் , அப்படியே வீடியோ கால் வாயேன் என்றார். 

என்னப்பா நான் சொன்னேன்ல நான் ஷூட்டிங்ல இருக்கேன்னு. சரி சொல்லுங்க என வீடியோவை இணைக்க இன்னிக்கு உங்க ஆடியோ லான்ச்ல அப்பா, முடிஞ்சுடுச்சா, என்றவுடன் அப்படியே உனக்கு ஒரு ஃபைல் அனுப்பி இருக்கேன் வந்துடுச்சா பாரு என்றார். ஆமாப்பா ‘ஏய்ய்! ஐ காட் த சாங்ஸ் , என்ற ஸ்ருதி வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு , அப்பா நான் சொன்னேன்ல அந்த பியர்டு பையன் என ஏதோ ஒரு ரகசியம் சொல்ல எடுக்க , ஸ்ருதி அத அப்பறம் பேசலாம், பல்லாயிரக்கணக்கான பேர் பாத்துட்டு இருக்காங்க, பெரிய ஸ்க்ரீன்ல நீ இருக்க, என்றவுடன் வெட்கத்துடன் அப்பா சொல்லியிருக்கலாம்ல, என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே ஹாய் சொல்லிவிட்டு கட் செய்தார். பலரும் சிடி வெளியிட கமலோ நான் உங்களை விட்டு 10 வருடம் அட்வான்ஸா இருக்கிறேன் என்பதை இந்த செய்லால் நிரூபித்தும் காட்ட அரங்கமே கைதட்டலில் நிறைந்தது. 

உத்தம வில்லன் இசை வெளியீடு ஆல்பத்திற்கு: http://bit.ly/1B0astt

உத்தம வில்லன் பட ஆல்பத்திற்கு :  http://bit.ly/1wIfZ43

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close