Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோமா நிலையில் எடிட்டர் கிஷோர்! பிராத்தனை செய்யும் திரையுலகினர்!!

'ஈரம்' படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர் கிஷோர் டிஇ. விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என இதுவரை 30க்கும் அதிகமான படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தில் இவரது சிறந்த படத்தொகுப்புக்காக தேசிய விருதும் பெற்றிருக்கிறார். 


'விசாரணை' படத்தின்மூலம் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துக்கொண்டிருக்கும்போது மயக்கமடைந்துவிட்டார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தக் கட்டிகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை முடிந்த நிலையிலும் இன்னும் நினைவு திரும்பாமல் கோமா நிலையிலேயே இருக்கிறாராம் கிஷோர்.

சமூக வலைதளங்களில் #GetWellSoonKishore என்ற ஹேஷ்டேக்குடன் பிரார்த்தனையைப் பதிவு செய்துவருகிறார்கள் திரையுலகினரும், ரசிகர்களும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close