Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த முயற்சி!

’இசை’ படம் மூலம் ரீஎண்ட்ரி ஆன எஸ்.ஜே.சூர்யா அப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மேலும் படத்தில் ஓரிரு பாடல்களும் அவரே பாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா அடுத்து இயக்கும் படம் அனிமேஷன் படமாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஹாலிவுட்டில் வெளியான  ’ஆல்வின் அண்ட் சிப்மங்ஸ்’ பாணியில் அடுத்த படம் எடுக்க உள்ளார். 

அணில்களை வைத்து இசை கச்சேரி, அதை சுற்றிய கதையாக நகரும் பாணியிலான கதையாக இருக்கும் அப்படத்தின் சாயலின் இந்த படமும் இருக்கும் என தெரிகிறது. மேலும் இப்படத்திற்கும் இசை எஸ்.ஜே.சூர்யா தான் என கிசுகிசுக்கப்படுகிறது. 

பத்து வருடம் கழித்து மீண்டும் படம் எடுத்தாலும் கூட இன்னமும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு தக்க சான்று ‘இசை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு. பரவலாக நல்ல விமர்சனங்களையும், முக்கியமாக க்ளைமாக்ஸ் எல்லாராலும் பாரட்டப்பட்டது. இந்த படமும் அதே பாணியில் ரசிகர்களை கவருமா என்பது இனிதான் தெரியவரும். எனினும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close