Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருண்விஜய்யை மீண்டும் ட்ரெண்டாக்கிய அஜித் ரசிகர்கள்!

'என்னை அறிந்தால்' படம் மூலம் அதிகம் பேச்சப்பட்டவர் அஜித்ட்தைக் காட்டிலும் விக்டர் கதாபாத்திரத்தில் கலக்கிய அருண் விஜய் தான். ரசிகர்கள் அருண் விஜய்யை கண்கலங்கவே வைத்துவிட்டனர்.

தற்போது அருண் விஜய் நடிப்பில்  ’வா டீல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அஜீத் ரசிகர்கள். இன்று காலை ’வா டீல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் #VaaDeal என்கிற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

விக்டர் கதாபாத்திரமாகவே நினைத்து அருண் விஜய்யை விக்டர்  என்றே அழைக்கும் என அஜீத் ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து படத்தை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதனையடுத்து மகிழ்ச்சி அடைந்த அருண் விஜய்யும் ரசிகர்களின் கமெண்ட்ஸை தொடர்ந்து ரீட்வீட் செய்தார். ’வா டீல்’ படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். தமன் இசையில் படம் மே மாதம் வெளியாக உள்ளது.

  ’தடயற தாக்க’, படத்தில் வித்யாசமான ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்த அருண் விஜய் ’என்னை அறிந்தால்’ படத்தின் வில்லன் ரோலில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.  தற்போது ‘வா டீல்’ படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close