Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படத்தில் தேசிய விருது பெற்ற உத்தரா பாடல்!

’சைவம்’ படத்தின் அழகே பாடல் பாடிய உத்தரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்காக தேசிய விருதை  பெற்றார். தற்போது உத்தரா, விஜய்யின் 59வது படத்தில் பாடல் பாடவிருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க உள்ள படம் ‘விஜய் 59’. இன்னமும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

 

 

முன்னதாக ‘சைவம்’ படத்தின் மூலம் உன்னிகிருஷ்ணன் மகள் உத்தராவை பாடகியாக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திலும் உத்தராவிற்கு பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். அட்லீ என்பதால் குடும்பம் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் தற்போது ஒரு குழந்தை பாடலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சமீபத்தில் உத்தரா பேசுகையில், தான் விஜய்யின் தீவிர ரசிகை என்றும், மேலும் அவரது அடுத்த படத்தில் ஒரு பாடல் பாடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அழகுக் குட்டிக்கு வாழ்த்துகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close