Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ காதல் கண்மணிக்கு யு/ஏ - பி.சி.ஸ்ரீராம் ஆச்சர்யம்!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ காதல் கண்மணி’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் மற்றும் டிரெய்லர் என அனைத்தும் சமீபத்தில் வெளியாகி ஐடியூன்ஸ், மற்றும் யூடியூப் என வைரலாகி வருகிறது.

படம் 17ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தை பார்த்த சென்சார் தரப்பு படத்திற்கு யு/ஏ கொடுத்துள்ளது. எனினும் படக்குழு மீண்டும் யு வாங்கும் முயற்சியில் உள்ளனர். என்ன ஆயினும் படம் 17ம் தேதி சொன்ன தேதியில் வெளியாகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் , சென்சார் தரப்பு ’ஓ காதல் கண்மணி’ படத்திற்கு யு/ஏ கொடுத்துள்ளனர். அவர்களது நேர்மையை குறித்து நான்கேள்வி கேட்கவில்லை . ஆனால் ஒரு எளிமையான காதல் கதைக்கு யு/ஏ கொடுத்துள்ளதுதான் ஆச்சர்யமாக இருக்கிரது என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close