Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் இணைகிறது சூதுகவ்வும் படக்குழு!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் “சூதுகவ்வும்”. இப்படத்தினை நலன் குமாரசாமி இயக்க பாபிசிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் மற்றும் சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நலன் குமாரசாமி இயக்கவிருக்கும் இப்புது படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகி தேடல் நடைபெற்று வருகிறதாம். படப்பிடிப்பு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி சென்னையில் 20 நாட்கள்  நடத்தவுள்ளனர்.

நகைச்சுவை கலந்த த்ரில்லர் கதையை சூதுகவ்வும் படத்தில் தந்த நலன் குமாரசாமி இந்தப்படத்தில் நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் கதையாக உருவாக்கவுள்ளாராம்.

சூது கவ்வும் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணன் இப்படத்தின் இசையமைக்க திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சி.வி.குமார் மற்றும் ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜாவும் தயாரிக்கவிருக்கின்றனர்.  சூவுகவ்வும் படக்குழு மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதிக்கு பொறம்போக்கு மற்றும் இடம் பொருள் ஏவல் படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close