Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுக்கு எதிராக போராட தயாராகும் பவன்கல்யாண்!

ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலைநகரம் அமைக்க உள்ள பகுதியில் விவசாய நிலங்களை ஆந்திர அரசு அபகரிக்கிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதற்காக எதிர்த்து போராடி வருகிறார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன்கல்யாண்.

விவசாய நிலங்களை அரசிடமிருந்து காப்பாற்றி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று விவசாயிகள் ஜனசேனா கட்சி தலைவரான பவன்கல்யாணிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து தலைநகரம் அமையவுள்ள குண்டூர் பகுதியில் பவன் சென்று விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்னையென்றால் சாகும் வரை போரிடுவேன் என்று கூறினார் பவன்.

தற்பொழுது ட்விட்டரில், “ அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அரசிற்கு எதிராக போராடவும் தயாராக இருக்கிறேன்” என்று சமுக வளைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பவன்கல்யாண்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close