Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான் - கங்காரு பட தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி குமுறல்!

சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'சாமி இயக்கத்தில் 'கங்காரு' என்கிற படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் 24ல் 150 திரையரங்குகளில் வெளியாகிறது .

அப்படி என்ன சினிமாவில் உங்களுக்கு கஷ்டம் என்று கேட்டவுடன் அவர் கொட்டித் தீர்த்த வார்த்தைகள் இதோ.  ''சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்களுக்கே சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள்தான். அனைவருக்கும் ஊதியம் வழங்கும் அந்த தயாரிப்பாளர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம். தயாரிப்பாளர் படும் பாடுகளை அவர்கள் சந்திக்கிற சவால்களை சொல்லி மாளாது. ஒரு படம் திட்டமிட்டுத் தொடங்குவது முதல் எடுத்து சென்சார் ஆகி வெளியிட்டு முடிப்பதற்குள் அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.'' 

 ஒரு படம் எடுத்து வெளிவந்து விட்டால் திருட்டு நோகாமல் விசிடி   போட்டு கொள்ளையடிக்கிறார்கள். தடுக்க வழியில்லை. ஒரு படத்துக்கு 'யூ' சான்தறிதழ் கிடைத்தால்தான் 30 சதவிகித வரிவிலக்கு கிடைக்கும். சென்சாரில் யார்யாரோ கேள்வி கேட்பார்கள். என்ன வெல்லாமோ குதர்க்கமாக கேட்பார்கள்

 அப்பாடா 'யூ' சான்தறிதழ் வாங்குவதற்குள் போதும் போதும் என்று நாக்கு தள்ளி விடுகிறது.இவ்வளவு சிரமப்பட்டு படமெடுத்து வெளியிட்டால் வெளிவரும் முன்பே எவன் எப்போது கேஸ் போடுவான் வழக்கு போடுவான் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.'' என்றவரிடம் கங்காரு படம் குறித்து கேட்கையில், 

'''கங்காரு'படம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் ஏற்கெனவே வெற்றி பெற்று விட்டன. எந்தப் போட்டியுமின்றி ஏப்ரல் 24ல் வெளிவருகிறது. படத்தின் மீதும் அதன் தரத்தின் மீதும் எனக்கு பெரிதும் நம்பிக்கை இருக்கிறது.'' என்றார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close