Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபலங்களை கவரும் ஷமிதாப் ஆப்ஸ்!

சமீபத்தில் வெளியான ஷமிதாப் படத்தில், தனுஷ் உதட்டினை அசைக்க அமிதாப் பச்சனின் குரல் கேட்கும். நிஜமாகவே நாம் விரும்பும் ஹீரோக்களில் குரலும் நம் உதட்டசைவும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? அதற்காகத்தான் வந்துள்ளது டப்ஸ் மேஷ் ஆப்ஸ்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த  ஆப்ஸை டவுன்லோட் செய்தால் இதில் நிறைய வாய்ஸ்கள் கொட்டிகிடக்கின்றன. அது தவிர நீங்களே ரெக்கார்ட் செய்தும், உங்கள் போனில் உள்ள சத்தங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

பின்னர் திரையில் முன்பக்க கேமரா ஆன் ஆகும் அதில் உங்கள் வாய்ஸுக்கு ஏற்றவாறு உதட்டை அசைத்தால் உங்கள் உதட்டசைவோடு நீங்கள் தேர்ந்தெடுத்த குரல் இணைந்துவிடும். உதாரணமாக ஒபாமாவின் குரலுக்கு நீங்கள் உதட்டை அசைத்தால் உங்கள் வாயில் இருந்து ஒபாமாவின் வாய்ஸ் கேட்கும். இந்த வீடியோவை இணையத்தில் சேர் செய்யலாம்.

இந்தியாவில் பிரபலமாகிவரும் இந்த அப்பிளிகேஷனை தமிழ் நடிக நடிகைகளும் பயன்படுத்தி வீடியோவை சேர் செய்துவருகின்றனர். அனிருத், சிம்பு, விஷால், சூரி, டி.இமான், ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த வசனங்களுக்கு உதட்டினை அசைத்து வீடியோவாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்களே தற்பொதைய ட்ரெண்டாகி வருகிறது. 

அனிருத் வீடியோ:

பிரேம்ஜி வீடியோ:

Having fun with dubsmash

Posted by Premgi Amaren on Monday, April 20, 2015

டி.இமான் வீடியோ:

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close