Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியல் கதைக்களத்தில் ஆர்யா?

 2015 ஆர்யா காட்டில் மழை என்றே சொல்லலாம். சுமார் 5க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாகி இருக்கிறார் ஆர்யா. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கிருஷ்ணாவுடன் நடிக்கும் ‘யட்சன்’. விஜய் சேதுபதியுடன் நடித்து ரிலீஸ்க்கு காத்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. 

இது தவிர்த்து தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ .இந்த படம் தெலுங்கில் ‘சைஸ் ஸீரோ’ என்ற பெயரில் உருவாகிறது. ராஜேஷ் இயக்கத்தில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, மலையாளத்தில் பிருத்வி ராஜுடன் ‘டபுள் பேரல்’ இது மட்டுமின்றி விஷ்ணுவின் ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’ படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

இப்போது புதிய செய்தியாக ’நான்’ , ‘அமரகாவியம்’ படங்களை இயக்கிய ஜீவா ஷங்கர் அரசியல் சார்ந்த த்ரில்லர் கதை ஒன்றை ஆர்யாவிற்கு சொல்லியிருக்கிறாராம். ஆர்யாவின் பதிலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை ஆர்யா இப்படத்திற்கு ஓகே சொல்லிவிட்டால் ஆர்யா நடிக்கப்போகும் முதல் அரசியல் கதையாக இருக்கும் எனலாம். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close