Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெய்யின் அடுத்தப் படத்தின் கதையைக் கேட்டு பிரமித்த விஷால்!

இயக்குநர் திரு இயக்கத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கவிருக்கும் படத்திற்கான  மற்ற நடிகர்கள்  மற்றும் படக்குழு முடிவாகிவிட்டது. ஜெய்க்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். 

சமீபத்தில் விஷால் இந்தப் படத்திற்கான கதையைக் திரு சொல்லக் கேட்டிருக்கிறார். கதையைக் கேட்டு பிரம்மிப்புடன் இருக்கிறாராம் விஷால்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இயக்குநர் திருவின் அடுத்தப் படத்திற்கான கதையை  இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் பாண்டியராஜுடன் சேர்ந்து இப்போ தான் கேட்டேன். சூப்பர், நல்ல சமுக செய்தி படத்தில் இருக்கிறது. திருவிற்கும் ஜெய் மற்றும் ஒட்டு மொத்த டீமிற்கும் வாழ்த்துகள்” என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் திரு மற்றும் விஷால் இருவருமே நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமில்லாமல் திரு இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களான தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் நான் சிகப்பு மனிதன் என்ற இருபடங்களிலுமே விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஜெய் - திரு அடுத்தப் படத்தினை சுஷாந்த் பிரசாத் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close