Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

400க்கும் அதிகமான திரையரங்குகளில் ’உத்தம வில்லன்’!

கமலின் கதை , திரைக்கதையிலும், ரமேஷ் அரவிந்த் இயக்கத்திலும், கமல், கே.பாலசந்தர், ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, ஜெயராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாளை மே தின சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘உத்தம வில்லன்’. 

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெற்றுள்ளது. இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. 

இந்நிலையில் 2மணி நேரம் 53 நிமிடங்கள் கொண்ட இப்படம் தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட திரயரங்குகளில் வெளியாகிறது. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. சமீபத்தில் வெளியான படங்களில் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘உத்தம வில்லன்’ என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close