Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவின் சமரசத்தை நிராகரித்த டி.ஆர்- ஜெயம்ரவி படக்குழுவினர் தவிப்பு.

ஜெயம்ரவி நடித்திருக்கும் ரோமியோஜூலியட் படத்தில்,

டண்டணக்கா...ணக்கா...ணக்கா,

எங்க தல டீயாரு,

சென்டிமெண்ட்ல தாறுமாறு

மைதிலி என்னைக் காதலின்னாரு,

அவரு உண்மையா லவ் பண்ணச் சொன்னாரு

என்றொரு பாடலை உருவாக்கி அதை வெளியிட்டும் விட்டார்கள். இதனால் அந்தப்படத்துக்கு எதிராக வழக்குப்போட்டார் டி.ராஜேந்தர். அதைத் தொடர்ந்து படத்தை அவருக்குத் திரையிட்டுக் காட்டும்படி சொல்லப்பட்டது. அதனால் சில நாட்களுக்கு முன்பாக படத்தை டி.ராஜேந்தருக்குத் திரையிட்டுக் காட்டினார்களாம்.

படத்தைப் பார்த்த டி.ராஜேந்தர், வெளியே வந்ததும் படம் நல்லா வந்திருக்கு என்று படக்குழுவினரைப் பாராட்டிவிட்டுக் கிளம்பிப்போய்விட்டாராம். வீட்டுக்குப் போனதும் போன் செய்து, படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் மற்றும் காட்சிகள் எல்லாவற்றையும் நீக்கிவிடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம்.

ஏனெனில் அவர் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் மட்டும் படத்தில் இல்லையாம். கதைப்படி, நாயகன் ஜெயம்ரவி டி.ராஜேந்தரின் ரசிகராக நடித்திருக்கிறாராம். அதனால் பல இடங்களில் டி.ஆர் படம் மற்றும் அவரைப் பற்றிப் பேசுகிற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். அவற்றை நீக்கினால் மொத்தப்படத்துக்கும் பாதிப்பு ஏற்படுமாம். இதனால் சிம்புவை வைத்துச் சமாதானம் பேச முற்பட்டார்களாம். ஆனால் டி.ஆர் அதையும் நிராகரித்துவிட்டாராம்.

தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக நீக்கியே ஆகவேண்டும் என்று உறுதியோடு இருக்கிறாராம். இதனால் ரோமியோஜூலியட் படக்குழுவினர் என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறிப்போய் மீண்டும் டி.ஆரிடமே சமரசம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close